Rajinikanth: முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் - நடிகர் ரஜினி டிவீட்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் டிவீட் செய்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் டிவீட் செய்துள்ளார்.
மேலும் அந்த டிவீட்டில், ”கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மதிப்பிற்குரிய திரு. மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும். 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில், அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை. அதனை எதிர்வரும் 28ம் தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் மதிப்பிற்குரிய திரு நரேந்திர மோடிஜி அவர்கள் தொடங்ல்கி வைக்க இருக்கிறார்கள். போட்டி குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு விடியோ தயாரித்துள்ளனர். அதன் டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என குறிப்பிட்டிருக்கிறார்.
@CMOTamilnadu @chennaichess22 pic.twitter.com/LvZ4C2yEpX
— Rajinikanth (@rajinikanth) July 15, 2022
மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி துவங்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக, இது குறித்து முதல்வர் வெளியிட்டு இருந்த ட்விட்டர் பதிவில், “44 ஆவது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான டீசர் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு 7.30 மணிக்கு வெளியிடுகிறார். காத்திருங்கள்” என்று பதிவிட்டு இருந்தார். அந்த அறிவிப்பின் படி தற்போது அந்த டீசரை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த டீசருக்கு பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இந்த விடியோவில் நடனமாடியிருக்கிறார்.
#ChessChennai2022 pic.twitter.com/tiZeCN0a5v
— Rajinikanth (@rajinikanth) July 15, 2022
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி, ரூ 100 கோடி செலவில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருக்கிறது. போட்டிகள் மாமல்லபுரத்தில் நடை பெற்றாலும், இதன் தொடக்க போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன. இதன் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்