Rain Complaints: மழைக்கால புகார்களா? இனி கவலை வேண்டாம்- சென்னை மாநகராட்சி அசத்தல் முன்னெடுப்பு!
அதில் மழை நீர் தேங்கல், மரம் விழுந்து கிடப்பது, தெரு விளக்கு எரியாமை போன்ற புகார்களைப் பதிவு செய்யலாம்.
பெருநகர சென்னை மக்கள் மழைக்கால புகார்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் WhatsApp எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பெரு நகர சென்னை மாநாகராட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மழைக்காலத்தில் ஏற்படும் இடர்ப்பாடுகளை சரிசெய்ய ஒரு வாட்ஸப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
செயல்படுவது எப்படி?
இந்த எண்ணுக்கு வாட்ஸப்பில் ஹாய் என்று டைப் செய்தால், மொழியைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படும். அதில், குடிமகன், தன்னார்வலர் என்று 2 பிரிவுகள் இருக்கும். அதில் குடிமகன் என்னும் பிரிவைத் தேர்வு செய்ய வேண்டியது முக்கியம்.
அதில் மழை நீர் தேங்கல், மரம் விழுந்து கிடப்பது, தெரு விளக்கு எரியாமை போன்ற புகார்களைப் பதிவு செய்யலாம். சரியான லொகேஷன் மற்றும் புகைப்படத்தோடு பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
பெருநகர சென்னை மக்களே
— Greater Chennai Corporation (@chennaicorp) November 30, 2024
மழைக்கால புகார்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் WhatsApp எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.#ChennaiCorporation#HeretoServe#NorthEastMonsoon#FengalCyclone #Fengal#ChennaiRains2024 pic.twitter.com/vdPL0PmcTl
பொது மக்கள் அனுப்பிய புகார்கள் துறை ரீதியாக அனுப்பப்பட்டு, விரைவாக நடவடிக்கைகள் அனுப்பப்படும்.
என்ன எண்?
9445551913 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார்களை பதிவு செய்து, தீர்வு காணலாம்.
என்ன பிரச்சினை?
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்ட ஃபெஞ்சல் புயல், மகாபலிபுரம் அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில், கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் 134 இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் கிட்டத்தட்ட 1,600 மோட்டார் பம்புகள் கொண்டு முக்கிய இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது.
முக்கிய சாலைகள், அதாவது ஓஎம்ஆர், மயிலாப்பூர் சாலை, ஐந்து ஃபர்லாந்து சாலை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அண்ணா மேம்பாலம், ராயப்பேட்டை உள்ளிட்ட நகரின் பிரதான இடங்களிலும் தண்ணீர் குளம்போலத் தேங்கியுள்ளது.
சென்னையில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை உடனடியாக அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுவரை 5 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின்சார வாரியமும் முழு வீச்சில் இயங்கி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா உணவகத்தில் இன்று முழுவதும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி உதவி எண்ணை அறிவித்துள்ளது.