மேலும் அறிய

Fact check: புகைபிடிப்பவர்கள், சைவ உணவு உண்பவர்கள் கொரோனா தொற்றினால் குறைவாக பாதிக்கப்படுகிறார்களா?

சமூக வலைத்தளங்களில் கொரோனா தொற்று குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியதிலிருந்து, நோய் தொற்று தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது. முன்னதாக 0 ரத்த வகை உடையவர்களை கொரோனா குறைவான அளவில் தாக்குவதாகவும், AB மற்றும் B ரத்த வகை உடையவர்களை கொரோனா அதிகளவில் பாதிக்கும் என புரளிகள் வெளிவந்து கொண்டிருந்தன.

அந்த வரிசையில்  தற்போது புகைப்பிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்களை கொரோனா தொற்று  குறைவாக தாக்கும் என அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழுவின் கணக்கெடுப்பினை மேற்கோள் காட்டி பல தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இந்த தகவல் முற்றிலும்  உண்மையா? அல்லது பொய்யானதா? என்பதற்கான தகவல்கள் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை.

Fact check: புகைபிடிப்பவர்கள், சைவ உணவு உண்பவர்கள் கொரோனா தொற்றினால் குறைவாக பாதிக்கப்படுகிறார்களா?

குறிப்பாக கொரோனா வைரஸ் சுவாச நோயாக இருந்தாலும், சளி உற்பத்தியை அதிகரிக்கிறது. இதற்கு புகைபிடித்தல் நன்மை பயக்கும் என்று சிஎஸ்ஐஆர்  கணக்கெடுப்பில் பரிந்துரைத்துள்ளதாகவும், மேலும் கோவிட்டுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் நார்ச்சத்து நிறைந்த சைவ உணவுக்கு ஒரு பங்கு இருக்கலாம் என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் தற்போது வரை சைவ உணவு உண்பது  மற்றும் புகைப்பிடிப்பது கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என்பதற்கு சீராலஜிக்கல் ஆய்வின் (serological studies) அடிப்படையில் எந்த வித முடிவையும் எடுக்க முடியாது என பத்திரிக்கை தகவல் பணியகம் தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும் இதுவரை இதுபோன்ற எந்த செய்திக்குறிப்பும் அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழுவின் சார்பில் வெளியிடவில்லை என கூறப்பட்டுள்ளது.

Fact check: புகைபிடிப்பவர்கள், சைவ உணவு உண்பவர்கள் கொரோனா தொற்றினால் குறைவாக பாதிக்கப்படுகிறார்களா?

ஆனால் புகைப்பழக்கத்துடனான எதிர்மறையான தொடர்பு வேறு இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இதன் காரணமாக கொரோனா தொற்று இவர்களை குறைவாக பாதிக்கப்படலாம் என்பதற்கு புகைப்பிடிப்பது காரணமானதாகக் காட்டப்படவில்லை. குறிப்பாக எந்தவொரு முடிவுகளையும் எடுப்பதற்கு  முன்னர் பலதரப்பட்ட ஆய்வுகள் அவசியமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக  செரோபோசிட்டிவிட்டி என்பது தொற்று. அபாயத்தின் ஒரு முழுமையடையாத குறிப்பானாக இருப்பதால், மாற்றப்பட்ட ஆண்டிபாடிக்கு பதில் மற்றும் இயக்கவியலால் சமமாக விளக்கப்படலாம் என்றும் சிஎஸ்ஐஆர் தெளிவுப்படுத்தியுள்ளது.

மேலும் புகைப்பிடிக்கும் பழக்கும் உள்ளவர்களுக்கு பொதுவாக நுரையீரலில் பிரச்சனை ஏற்படும், இப்படி இருக்கும் சூழலில் இப்பழக்கம் உள்ளவர்களை கொரோனா கடுமையாக பாதிப்பதோடு உயிரிழப்புகளை ஏற்படக்கூட செய்யும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் சமூக வலைத்தளங்களில் கொரோனா தொற்று குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. மேலும் அரசு தரும் தகவல்களை தவிர்த்து சமூக வலைத்தளங்களில் தேவையின்றி பரப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என மக்களிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget