மேலும் அறிய

Exclusive :’எனக்கு எதுவும் தெரியாது’ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினி விளக்கம்..!

’ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது, வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன்.. அப்படி எந்த சமூக விரோதியையும் எனக்கு தெரியாது’

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

Exclusive :’எனக்கு எதுவும் தெரியாது’ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினி விளக்கம்..!
தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் ரஜினி

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதனை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய நிலையில், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக தூத்துக்குடிக்கே சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்கள் அல்ல, சமூக விரோதிகள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எப்படி சமூக விரோதிகள் உள்ளே புகுந்து வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தார்களோ அதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் சமூக விரோதிகள் தான் வன்முறை செய்தனர் என பேட்டி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், போலீசை தாக்கியது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது  என எல்லா பிரச்னைகளையும் செய்தது சமூக விரோதிகள்தான், அப்பாவி மக்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.Exclusive :’எனக்கு எதுவும் தெரியாது’ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினி விளக்கம்..!

அப்போது செய்தியாளர்கள், இந்த வன்முறையை செய்தது சமூக விரோதிகள் தான் என்று எப்படி உறுதியாக சொல்கின்றீர்கள் என கேட்டபோது ‘எனக்கு தெரியும் ; செய்தது சமூக விரோதிகள்தான் என’ என சொல்லியிருப்பார். அதோடு, எப்போதும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடு ஆகிவிடும் என கோவமாக பேசியிருப்பார்.Exclusive :’எனக்கு எதுவும் தெரியாது’ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினி விளக்கம்..!

இந்நிலையில், சமூக விரோதிகள் யார் என்று தெரிந்த ரஜினி, அவர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கூட ரஜினியை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்தனர்.

அதன்பிறகு, அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ரஜினி, தூத்துக்குடியில் உள்ள  விசாரணை ஆணைய அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகி வன்முறை சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், தனது உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிகாந்த் ஆஜராகாமல் தவிர்த்துவந்தார்.

Exclusive :’எனக்கு எதுவும் தெரியாது’ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினி விளக்கம்..!
விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன்

இந்நிலையில், தனது தரப்பு விளக்கத்தை எழுத்து மூலமாக விசாரணை ஆணையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் அனுப்பி வைத்துள்ளார். அதில் ‘தூத்துக்குடி வன்முறை சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது ; தொலைக்காட்சி பார்த்தே துப்பாக்கிச் சூடு குறித்து விவரங்களை தெரிந்துக்கொண்டேன்’ என தெரிவித்துள்ளார். அதோடு, ’சமூக விரோதிகள் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்றும், அப்பாவி மக்கள் இதுபோன்று வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்ற காரணத்தினால் இது சமூக விரோதிகளின் செயலாக இருக்கலாம் என்று தான் கருதியதாகவும், உண்மையில் சமூக விரோதிகள்தான் இந்த வன்முறையை ஏவிவிட்டார்களா என்பது தனக்கு தெரியாது’ என்றும் கூறியுள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Embed widget