மேலும் அறிய

" 1098 உதவியால் தப்பிய சிறுமி " சிறுமியை கொடுமைப்படுத்திய பெண்

ஈரோட்டில் 11 வயது வளர்ப்பு மகளுக்குச் சூடு வைத்து சித்திரவதை செய்த சித்தி - அக்கம் பக்கத்தினர் உதவியால் தப்பிய சிறுமி - பெண் கைது

இரண்டாவது திருமணம் - குழந்தைக்கு நேர்ந்த கொடுமை

ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு முதலில் குமுதா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து மணிகண்டன், அதே பகுதியை கயல் விழி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு முதல் மனைவிக்கு பிறந்த 11 வயது சிறுமி தந்தையுடன் வசித்து வந்த நிலையில், அந்த குழந்தையை கயல் விழி தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

அலறி துடித்த சிறுமி

சிறுமிக்கு சூடாக்கிய கரண்டியால் உடலில் சூடு வைத்தது, சுடுநீரை ஊற்றியது, அடித்து சித்திரவதை செய்தது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், "ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு" என்று கூறி குழந்தையை மிரட்டியதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

கயல்விழி குழந்தையை அடித்து சித்ரவதை செய்யும் போதும் குழந்தை அலறி துடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிலர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது குழந்தை மீது நடைபெற்று வந்த கொடுமைகள் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கயல்விழியிடம் அக்கம் பக்கத்தினர் கேட்ட போது

"இது எங்கள் குடும்ப பிரச்சினை. நான் அடிப்பேன், திட்டுவேன், என்ன வேண்டுமானாலும் செய்வேன். உங்களுக்கு என்ன ? உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்லுங்கள்" என்று அலட்சியமாக பதிலளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர், "Childline 1098"-க்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டதுடன், மொடக்குறிச்சி காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று முதற்கட்ட விசாரணை நடத்தினார். பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றம் என்பதால், இந்த வழக்கு ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி அளித்த வாக்கு மூலம் மருத்துவ பரிசோதனை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், சித்தி கயல்விழி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget