ஈரோடு: நாளை மறுநாள் மின் தடை! அவசர அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கா?
ஈரோடு மாவட்டத்தில் நாளைமறுநாள் (16.12.2025) செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நாளைமறுநாள் (16.12.2025) செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
மின் தடை பகுதிகள்
கோபி அருகே உள்ள நம்பியூர், புதுசூரிபாளையம், மலையப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின்சார வினியோகம் இருக்காது.மொட்டணம், குப்பிபாளையம், பழனிகவுண்டம்பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கிடாரை, இச்சிபாளையம், திட்டமலை, நம்பியூர் கோவை ரோடு, ஜீவா ரோடு, யூனியன் ஆபீஸ், நம்பியூர் டவுன் பகுதி, கொன்னமடை, வெங்கிட்டுப்பாளையம், காவிலிபாளையம், நாச்சிபாளையம் குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகள், கோசணம், ஆலாம்பாளையம், தீர்த்தாம்பாளையம், செல்லிபாளையம், மூணாம்பள்ளி, கே.மேட்டுப்பாளையம், சொட்ட மேடு, காமராஜர் நகர், பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம் மற்றும் ஓனான் குட்டை, எலத்தூர், கடசெல்லிபாளையம், கள்ளகாட்டுபாளையம், மலையப்பாளையம், ஒழலக்கோயில், சின்ன செட்டியாபாளையம், பெரிய செட்டியாபாளையம் பகுதியில் மின்சார வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.





















