Youtube Channel Training : யூடியூப் சேனல் தொடங்க ஆசையா? 3 நாள் பயிற்சி முகாம் நடத்தும் தமிழக அரசு - எங்கு? எப்போது?
Create Youtube Channel: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.
Create Youtube Channel: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.
சென்னையில் மூன்று நாள் பயிற்சி:
செல்போன் வைத்திருக்கு எல்லோரும் தங்களுக்கு என்று தனி யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதையே வேலையாக வைத்து சம்பாதிக்கும் சூழல் இன்று உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் தான் இதில் அதிகமான யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர்.
இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் கைக் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறிந்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது
ஏற்கனவே கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடத்தியது. இந்த நிலையில், இந்த மாதத்தில் இரண்டாவது கட்ட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
எப்போது, எங்கே நடைபெறுகிறது?
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 29.01.2024 முதல் 31.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் என்ன?
இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் - மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
பார்த்தசாரதி கோயில் தெரு,
இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600 032
44-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
IIT Recruitment: சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை; மாதம் ரூ.80,000 ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TNHRCE Recruitment: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!