IIT Recruitment: சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை; மாதம் ரூ.80,000 ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
IIT Recruitment: சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரத்தை காணலாம்.
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட அதிகாரி / Structural Engineer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
திட்ட அதிகாரி,Structural Engineer
கல்வி மற்றும் பிற தகுதிகள்
B.Tech/B.E. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மெக்கானிகல் இஞ்ஜினியரிங் துறையில் எம்.டெக் படித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
மெக்கானிக்கல், சிவில், ஏரோ-ஸ்பேஸ் பொறியியல் துறையில் பி.ஹெச்.டி. படித்திருக்க வேண்டும்.
பணி காலம்
இது ஓராண்டு கால தற்காலிக பணி. பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஊதிய விவரம்
இதற்கு ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.02.2024
இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in
தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல் 05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Project%20Officer%20-%20%20Advt%2008.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
கபாலீஸ்வரர் கோயில் வேலைவாய்ப்பு
சென்னையில் உள்ள பிரபல கபாலீஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி கடைசி தேதியாகும்.
பணி விவரம்
- நூலகர்
- அலுவலக உதவியாளர்
- ஓட்டுநர்
- உதவி மின் பணியாளர்
கல்வித் தகுதி
- நூலகர் பணிக்கு 10-வது தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- உதவி மின் பணியாளர் பணிக்கு மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து 'H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- நூலகர் - ரூ.18,500 - ரூ.58,600/-
- அலுவலக உதவியாளர்- ரூ.18,500 - ரூ.58,600/-
- ஓட்டுநர் - ரூ.18,500 - ரூ.58,600/-
- உதவி மின் பணியாளர் - ரூ.16,600 - ரூ.52,400/-
இதர நிபந்தனைகள்
இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
கபாலீசுவரர் கோயில்,
மயிலாப்பூர்,
சென்னை - 04
விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.01.2024 மாலை 5.45 வரை
வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு - https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.