மேலும் அறிய

Ramadoss: பொறியியல் தமிழ்த்தேர்வு விடைத்தாள் திருத்த அறிவியல், உடற்கல்வி ஆசிரியர்களா? தமிழை இழிவு செய்வதா? - ராமதாஸ் கேள்வி 

பொறியியல் படிப்புக்கான தமிழ்ப்பாடத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்த அறிவியல், உடற்கல்வி பாட ஆசிரியர்களா? இப்படியா தமிழை வளர்ப்பது? என்று பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

பொறியியல் படிப்புக்கான தமிழ்ப்பாடத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்த அறிவியல், உடற்கல்வி பாட ஆசிரியர்களா? இப்படியா தமிழை வளர்ப்பது? என்று பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

’’தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் கடந்த ஏப்ரல் 21-ஆம் நாள் நடத்தப்பட்ட பொறியியல் பட்டப்படிப்புக்கான முதலாம் ஆண்டு தமிழ் மொழிப் பாடத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி  நேற்று முன்நாள் மே 25-ஆம் நாள் தொடங்கியுள்ளது. தமிழர் மரபு என்ற தமிழ்ப் பாட விடைத்தாளை திருத்த தனியார் பொறியியல் கல்லூரிகளில் இருந்து இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உடற்கல்வியியல் ஆசிரியர்கள்  அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் மூலம் கிடைத்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழ் மொழிப் பாட விடைத்தாள்களை பிற பாட ஆசிரியர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதையும், அதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டுகொள்ளாமல் அனுமதிப்பதையும் விட, அன்னைத் தமிழ் மொழியை இழிவுபடுத்த முடியாது.

பட்டப் படிப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து எழுப்பி வந்த குரலின் பயனாக 2022-23ஆம் ஆண்டு  முதல் பொறியியல் படிப்பில் முதலாமாண்டின் இரு பருவங்களிலும்  தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை செயல்படுத்துவதில் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து குளறுபடிகளை செய்து வருகிறது. தொடக்கத்தில் தமிழ்ப் பாடத்தை நடத்த  தமிழாசிரியர்களை  அமர்த்தாமல், தமிழ் தெரிந்த பொறியியல் ஆசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து  அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்களை அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டது. பிற கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் அமர்த்தப்படவில்லை.

அன்னைத் தமிழுக்கு செய்யும் மரியாதையா?

அடுத்ததாக, கடந்த ஏப்ரல் 21-ஆம் நாள் நடத்தப்பட்ட தமிழர் மரபு என்ற தமிழ்மொழிப் பாடத் தேர்வை ஆங்கிலத்தில் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  அதற்கு அண்ணா பல்கலைக்கழகமே அனுமதி அளித்து கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி  இருந்தது. அதை தமிழ்மொழி பாடத் தேர்வு நடத்தப்பட்ட நாளிலேயே நான் கடுமையாக கண்டித்ததுடன், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தேர்வை ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மறுதேர்வு நடத்தாமல், பெரும்பான்மையான மாணவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ்ப்பாடத்  தேர்வை அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வது தான் அன்னைத் தமிழுக்கு செய்யும் மரியாதையா?

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அன்னைத் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தமிழ்மொழியின் அடிப்படையையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்  தமிழ்மொழிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ்மொழிப் பாடத்தை  நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லை; தமிழ் பாடத்திற்கான தேர்வும் தமிழில் நடத்தப்படுவதில்லை; தமிழ்ப்பாடத் தேர்வின் விடைத்தாளும் தமிழாசிரியர்களைக் கொண்டு திருத்தப்படுவதில்லை என்றால், இது தான் தமிழை வளர்க்கும் முறையா? 

பொறியியல் படிப்பில் தமிழ் மொழிப்பாடம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தையே இது சிதைத்து விடும். வரும் கல்வியாண்டிலாவது அனைத்து குறைகளையும் களைந்து,  பொறியியல் படிப்புகளில் தமிழ் மொழிப் பாடத்தை அதற்குரிய மரியாதையுடன் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் குப்பையில் தொலைந்த 3 சவரன் தங்கம்.. நேர்மையால் அதை மீட்டெடுத்த தூய்மைப் பணியாளர் சுப்பம்மா!
மதுரையில் குப்பையில் தொலைந்த 3 சவரன் தங்கம்.. நேர்மையால் அதை மீட்டெடுத்த தூய்மைப் பணியாளர் சுப்பம்மா!
TVK Vijay: திடீரென டிஜிபி அலுவலகம் சென்ற விஜய்.. மிரண்ட தொண்டர்கள்.. பரபரப்பு புகார்!
TVK Vijay: திடீரென டிஜிபி அலுவலகம் சென்ற விஜய்.. மிரண்ட தொண்டர்கள்.. பரபரப்பு புகார்!
TVK Vijay: ஆதாய‌ சூதாடி நீயா? நானா?.. விஜயை தரக்குறைவாக தாக்கிய பொன்ராஜ்.. உச்சக்கட்ட மோதல்!
TVK Vijay: ஆதாய‌ சூதாடி நீயா? நானா?.. விஜயை தரக்குறைவாக தாக்கிய பொன்ராஜ்.. உச்சக்கட்ட மோதல்!
மதுரை ரயில்வே சாதனை: 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து இலக்கை முறியடித்தது.. ஆச்சரியம் காத்திருக்கிறது!
மதுரை ரயில்வே சாதனை: 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து இலக்கை முறியடித்தது.. ஆச்சரியம் காத்திருக்கிறது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
Embed widget