மேலும் அறிய

ஆசையாக காலி நிலத்தில் நடும் மரங்கள் !! நாளை உங்கள் வீட்டையே தகர்க்கும் அபாயம்

நிலத்துக்கு அடியில் செல்லும் வேர்கள் வளர்வது வெளிப்படையாக தெரியாது. இதனால் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படும் போது அதற்கான காரணங்களை ஆராயும் போது தான் இந்த விஷயம் உரிமையாளர்களுக்கு தெரிய வரும்.

எதிர் காலத்தில் வீடு கட்டலாம் என்ற எண்ணத்தில் மக்கள் காலி மனை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு காலி மனைகள் வாங்கியவர்கள் அதில் , மரங்கள் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கமான நடைமுறை தான்.

இதன்படி, காலி மனையில் பல்வேறு வகை மரங்களை வளர்ப்பவர்கள் , அதில் வீடு கட்டும் போது பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எதிர் காலத்தில் வீடு கட்டும் வரை, நிலத்தை காலியாக இருக்கும் போது அதில் மரங்கள் வளர்ப்பதால் பயன் கிடைக்குமே என்று மக்கள் நினைக்கின்றனர்.

உண்மையில் காலி நிலத்தில் மரம் வளர்ப்பதால், உரிமையாளருக்கு பல்வேறு பயன்கள் கிடைப்பதுடன் , சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால் , இப்படி நீங்கள் ஆசையாக வளர்க்கும் மரங்களால் அந்த நிலத்தில் வீடு கட்டும் போது பல்வேறு புதிய பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

வேர் பரவும் மரங்கள் - கட்டிடத்தில் விரிசல்

பெரும்பாலான சமயங்களில் நிலம் வாங்குவோர் , அதன் மையப் பகுதியில் வீடு கட்ட இடம் விட்டு , ஓரங்களில் மரங்கள் வளர்க்கின்றனர். இந்த மரங்களால் அங்கு எதிர்காலத்தில் கட்டப்படும் வீட்டுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும்.

எனவே , காலி நிலங்களின் ஓரங்களில் மரம் நடும் நிலையில் , அதிக அளவுக்கு வேர் பரவும் வகையை சேர்ந்த மரங்களை தவிர்ப்பது நல்லது. அதிக தொலைவுக்கு வேர் பரவும் மரங்களை நட்டால் அங்கு கட்டப்படும் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலத்தின் ஓரத்தில், தான் மரங்களை வளர்க்கிறோம் என்றாலும், அதன் வேர்கள் பல்வேறு பக்கங்களில் பரவ வாய்ப்புள்ளது.

இதில் மனையின் மையப் பகுதியில் கட்டடம் கட்டும் போது அதன் அடியில் மரத்தின் வேர்கள் ஊடுருவ வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது பெரும்பாலான கட்டடங்கள், பிரேம்டு ஸ்டிரக்ட்சர் என்ற முறையில், துாண்கள், பீம்கள் அமைத்து தான் கட்டப்படுகின்றன. இதில் பக்கவாக்கில் இருக்கும் மரத்தின் வேர்கள் துாண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலத்தின் அடியில் பரவ வாய்ப்புள்ளது.

இப்படி, தொடர்ந்து பரவும் வேர், குறிப்பிட்ட காலத்தில் வெளிப் புறத்தில் மரத்தின் கிளைகள் போன்று தடிமனாக வளர வாய்ப்புள்ளது. நிலத்தில் மண் அடுக்குகளுக்கு இடையில் செல்லும் வேர்கள் படிப்படியாக வளரும் நிலையில் மண் அடுக்குகளை தாண்டி , கட்டடத்தின் நிலைப்பு தன்மையை பாதிக்கும்.

இவ்வாறு நிலத்துக்கு அடியில் செல்லும் வேர்கள் வளர்வது வெளிப்படையாக தெரியாது. வேர்கள் வளர்ந்து, அதனால் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படும் போது அதற்கான காரணங்களை ஆராயும் போது தான் இந்த விஷயம் உரிமையாளர்களுக்கு தெரிய வரும்.

எனவே, காலி மனையில் மரங்கள் வளர்க்கும் போது எதிர் காலத்தில் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மரங்களை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்? காங்கிரஸ் எம்பியுடன் மோதலா? - தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த அதிரடி விளக்கம்
மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்? காங்கிரஸ் எம்பியுடன் மோதலா? - தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி கொடுத்த அதிரடி விளக்கம்
School Education Department: அக்டோபர் 15ம் தேதி வரை தான் டைம்.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
School Education Department: அக்டோபர் 15ம் தேதி வரை தான் டைம்.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!
Tur Dal Procurement : ‘பருப்புல என்னய்யா உருட்டு?’ கேள்விகளால் தெறிக்கவிடும் திமுக..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget