மேலும் அறிய

Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

கள்ளக்குறிச்சியில் மாவட்டம் சின்னசேலத்தில், பட்டியலின மக்களை மாற்று சமூகத்தினர் கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால், மாவட்ட எஸ்.பி கோயிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குரால் கிராமத்தில் இந்து சமய அறநிலைதுறைக்கு சொந்தமான பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பொதுமக்கள் மேளதாளத்துடன் பெருமாளை வழிபட ஊர்வலமாக சென்றனர்.

அப்போது மாற்று சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதிதிராவிட மக்களை வழிபட அனுமதிக்காமல் கோயிலில் நுழைவு வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆதி திராவிட மக்களும் கோயிலின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோயில் முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

 பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அதிரடியாக கோயிலின் பூட்டை உடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களை கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்தார். மேலும், அவர்கள் சாமி தரிசனம் செய்த பிறகு வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த மாற்று சமூகத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினரிடம் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு உச்சகட்ட பதற்றமான சூழ்நிலை நிலவியது.

தொடர்ந்து மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கடுமையாக எச்சரிக்கை செய்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர் இருந்தபோதிலும் அந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை நீடித்து நீடித்ததால், கோயில் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் ஆனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம்: 6000 போலீசார் குவிப்பு... உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் தீபம்: 6000 போலீசார் குவிப்பு... உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
தூய்மைப் பணியாளர்களுக்கு நேர்ந்த கொடுமை! நாகூர் கந்தூரி விழா முடிந்து திரும்பியபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்!
தூய்மைப் பணியாளர்களுக்கு நேர்ந்த கொடுமை! நாகூர் கந்தூரி விழா முடிந்து திரும்பியபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்!
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
Udhayanidhi:
Udhayanidhi: "பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சியா?" முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
Kallakurichi MLA:கள்ளக்குறிச்சி தவெக MLA மீது மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
கள்ளக்குறிச்சி தவெக MLA மீது மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
Embed widget