மேலும் அறிய

Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்

Chennai GreenWays Bypass: சென்னையில் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கடந்த 2025ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சாலை திட்டம் 15 மாதங்களாகியும் அப்படியே முடங்கிக் கிடக்கிறது.

Chennai Bypass:  ஆர்.ஏ. புரம் மற்றும் அடையாறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26 கோடி ரூபாயில் க்ரீன்வேஸ் சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது.

15 மாதங்களாக முடங்கிக் கிடக்கும் பணிகள்:

வேகமாக வளர்ந்து வரும் பெருநகரமான சென்னையில், போக்குவரத்து நெரிசல் என்பது மிகவும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. இதனை குறைக்கும் நோக்கில் பல்வேறு சாலை மற்றும் மேம்பாலங்களை அமைக்கும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரம், சாந்தோம் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, க்ரீன்வேஸ் சாலையை துர்காபாய் தேஷ்முக் சாலையுடன் இணைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக 630 மீட்டர் புறவழிச் சாலையின் திட்டமிடப்பட்டது. ஆனால் அதன் கட்டுமானப் பணிக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக திட்டமே முடங்கிக் கிடக்கிறது.

ரூ.26 கோடி மதிப்பிலான திட்டம்:

சாலைக்கான திட்டம் என்பது, டி.ஜி.எஸ். தினகரன் சாலை (கிரீன்வேஸ் சாலை) மற்றும் ஆர்.கே.மட் சாலை சந்திப்பிலிருந்து, துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள அடையாரில் இருக்கும் திரு.வி.க. பாலம் வரை நீள்கிறது. 10.5 மீட்டர் அகலமுடைய மூன்று வழி ஒருவழி (One-Way) புறவழிச் சாலையாக அமைக்க முன்மொழியப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த ஆண்டு பிப்ரவரியில் `26.5 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை வழங்கியது. திரு.வி.க. பாலம் அருகே பணிகள் தொடங்கப்பட்ட போதிலும், சில மாதங்களிலேயே அவை நிறுத்தப்பட்டன. நிலுவையில் உள்ள ஒழுங்குமுறை அனுமதி காரணமாக அந்த பணிகள்  தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவே இல்லை.

இதையும் படியுங்கள்: TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை

சாலை திட்டத்தில் உள்ள பிரச்னை என்ன?

டி.ஜி.எஸ். தினகரன் சாலை மற்றும் ஆர்.கே. மடம் சாலை சந்திப்பில் முன்மொழியப்பட்ட சாலை தொடங்கி, அரசு இசைக் கல்லூரிக்கு சுமார் 50 மீட்டர் முன்பு அமைந்துள்ள செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையம் வழியாகச் சென்று, திரு வி கா பாலத்தின் கரையில் முடிவடையும் வகையில் சாலை திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இசைக் கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்திலிருந்து, இந்தச் சாலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்தின் வழியாகச் சென்று பாலத்துடன் இணையும். இந்தச் சாலை பாலத்திற்கு அருகில் அடையாறு ஆற்றங்கரையோரமாகச் செல்வதால், தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி அவசியமாகிறது.இதக்ற்காக ஏற்கனவே அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்ட நிலையிலும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை என கூறப்படுகிறது. 

போக்குவரத்து நெரிசல் எப்படி குறையும்?

தற்போது, ​​சந்தோம், ஆர்.கே. மட் சாலை மற்றும் க்ரீன்வேஸ் சாலையை இணைக்கும் சாலைகளில், உச்ச நேரங்களில் இரு திசைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகனங்கள் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்டு நிற்கின்றன. அதனை குறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த புறவழிச்சாலையானது, மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் துர்காபாய் தேஷ்முக் சாலைக்குள் நுழையாமல், அடையாற்றில் உள்ள திரு.வி.க. பாலத்தை நோக்கி மடைமாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புறவழிச்சாலை அமைக்கப்பட்டது, துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள நடுப்பகுதியை அகற்றி, அடையாரிலிருந்து ஆர்.ஏ.புரம் மற்றும் அபிராமபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்காக அந்தச் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.  மயிலாப்பூர், சந்தோம் மற்றும் ஆர்.ஏ.புரத்திலிருந்து வரும் வாகனங்கள் அடையாறு பகுதியை அடைய புதிய சாலை வழியாகத் திருப்பி விடப்படும். எனவே இந்த திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் விரைந்து அனுமதி கொடுக்க வேண்டும் என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை இப்படித்தான் இருக்கு! உண்மையை போட்டுடைத்த அமைச்சர் அருண்ராஜ்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை இப்படித்தான் இருக்கு! உண்மையை போட்டுடைத்த அமைச்சர் அருண்ராஜ்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
15 வயது மகளிடம் சில்மிஷம்! உடந்தையாக இருந்த தாயும் கள்ளக்காதலனும் கைது!
15 வயது மகளிடம் சில்மிஷம்! உடந்தையாக இருந்த தாயும் கள்ளக்காதலனும் கைது!
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
"சினிமா ரீல்ஸ் அரசு: தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டு" - தவெக அரசு மீது இபிஎஸ் கடும் சாடல்!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போகும்! நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
Embed widget