திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று நடைபெற்றுவரும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்முறையாக தவெக சார்பில் அதன் அமைச்சர்கள் கலந்துகொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அப்படியே தவெக-வுடன் கைகோர்த்தது. காங்கிரஸைத் தொடர்ந்து விசிக, இந்திய யூனியனை முஸ்லீம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளும் தவெக கூட்டணியில் இணைந்தன.
மேலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து தவெக-வுக்கு ஆதாரவு தெரிவித்து வருகின்றன. மறுபக்கம், காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என, டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டங்களை திமுக புறக்கணித்தது. பின்னர் இந்தியா கூட்டணியிலிருந்தும் விலகியது.
மேலும், நாட்டின் இறையாண்மை, கூட்டாட்சி தத்துவம்போன்ற மக்களின் நலன் சார்ந்த தேசியப் பிரச்சினைகளில் இந்தியா கூட்டணியில் உள்ள பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று விளக்கம் கொடுத்தது.
அதேவேளையில், காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் வேளையில் திமுக தீவிரமாக இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மறுபக்கம், இந்தியா கூட்டணிக்குள் தவெக-வை கொண்டுவரும் முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டது. இந்த நிலையில் தான், திமுக வெளியேறியதைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் தவெக தன் பங்களிப்பைத் தொடங்கியுள்ளது.
அதன் எதிரொலியாக, SIR விவாகரத்தில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரை நீக்கக்கோரி, தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுவருகிறது.
இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன், தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பங்கெடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















