(Source: ECI/ABP News/ABP Majha)
இத்தனை இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..
ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு பேர் வாடகை வீடுகளில் குடியிருக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் இல்லை. ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இதுவரை 15 லட்சம் பேர் இணைத்துள்ளனர் என்றும், 2811 பிரிவு அலுவலகங்களில் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளதாகவும் கூறினார்.
மேலும், அரசு மானியம் வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என கூறிய அவர், முறைகேடுகளை கண்டுபிடிக்கவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுவரை 1 கோடியே 15 லட்சம் மின் இணைப்பு தாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் உள்ளதாக கூறிய அவர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர் அமைக்கும் பணிகள் குறித்து வலியுறுத்தியுள்ளதாகவும், இன்று பிற்பகல் சரிசெய்யப்படும் எனவும் கூறினார்.
பொதுமக்களுக்கு எந்த வித அச்சமும் தேவையில்லை எனவும், டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளதாகவும், பொதுமக்கள் இந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மின்சார வாரியத்தை மேம்படுத்தவே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்றும், கடந்த ஆண்டு மட்டும் 15 ஆயிரத்து 516 கோடி வட்டி கட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மின்கட்டணம் செலுத்த தனியாக கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளதாககூறிய அவர், அதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், 50 ஆயிரம் பேர் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
View this post on Instagram
ஆதார் எண்ணை இணைத்தாலும் தற்போது உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். சிறப்பு முகாமுக்கு வருவோர் மின் இணைப்பில் தரப்பட்டுள்ள செல்போன் எண்ணுடன் வந்தால் எளிதாக ஆதாரை இணைக்கலாம். விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளை வைத்திருப்பவர்களும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என தெரிவித்தார்.