AIADMK: கூட்டத்துக்கு வாங்க! அதிமுக அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய தேர்தல் ஆணையம்!
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உடனான கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உடனான கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. வரும் திங்கட் கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது. மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
இதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்கள் பெறப்படும். இப்பணி வருகிற ஆகஸ்டு 1 ம் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது. வாக்காளர்கள் அவர்களின் ஆதார் எண் விவரங்களை 6B என்ற படிவத்தை பயன்படுத்தி அளிக்க வேண்டும். இப்படிவத்தை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டு, 'ஆன்லைன்' வழியாக ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஓட்டுச்சாவடி அலுவலர் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் படிவம் 6 பி வழங்கி, ஆதார் எண் பெறவும், சிறப்பு முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஆதார் எண் இணைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : எலி மருந்து வைத்த தக்காளியை நறுக்கி சுடச்சுட மேகி! டிவி பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
ஆதார் எண் தர இயலாதவர் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது என்றும், தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கப்பட்டால், கள்ள ஓட்டுப்பதிவை குறைக்க முடியும் எனவும் ஏற்கனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் விரைவில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக வரும் திங்கட் கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்