வாசனை மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்படி?
இயற்கையாக வாசனை வரும் மெழுகுவத்திகளை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
மெழுகு உருவாக்க..சாதாரண பெரிய மெழுகுவர்த்திகள் - 2, பீவேக்ஸ் (மூலிகை அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்): சிறிதளவு, சோயா வேக்ஸ் (கிராஃப்ட் மூலப் பொருட்கள் கிடைக்கும் கடைகளில் வாங்கலாம்) -: 100கிராம், எலுமிச்சை: 2
ஆரஞ்சு: 2
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுபழம் இரண்டையும் ஸ்பூன் உதவியுடன் உள் ளிருக்கும் பழத்தை மேலிருக்கும் தோல் சேதாரம் ஆகாதபடி அப்படியே எடுத்துவிடவும்.
இப்போது தோல் மட்டும் சிறிய கப் வடிவத்தில் கிடைக்கும். அத னுள் திரியை சிறிய அளவில் வெட்டி செங்குத்தாக நிறுத்தவும் பவுலில் சிறித ளவு மெழுகை எடுத்து உருக்கி பழத்தோ லுக்குள் ஊற்றவும்.
கலர்ஃபுல்லான ஆரஞ்சு, எலுமிச்சை வாசனை இணைந்து மெழுகுடன் சேர்ந்து வீட்டை நிறைக் கும். இதே பாணியில் கப்கள், கண்ணாடி பாட்டில்களில் கூட அரோமா மெழுகுவர்த்திகள் செய்யலாம்.
மெழுகு உருக்கும் போது அதனுடன் இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றைப் பொடி யாக சேர்த்து காய்ச்சி கப்களில் ஊற்ற லாம். வெண்ணிலா எசென்ஸ், பாடி ஸ்பிரே, பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ்,
நாம் பயன்படுத்தும் பெர்ஃபியூம்கள், டால்கம் பவுடர், சோப்புகள் கூட இணைத்து வீட் டிலேயே நறுமணமான மெழுகுவர்த்தி கள் உருவாக்கலாம்.
இலவங்கப் பட்டை நறுமணம் வீட்டின் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். வேம்பு, துளசி போன்றவை கொசுக்கள் அண்டாமல் பாதுகாக்கும்
உங்களுக்குப் பிடித்த நறுமணங்களில் தயாரிக்கலாம்.