Edappadi Palanisamy: காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
திருச்சியில், காவலர் குடியிருப்பில் வைத்தே இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி பீமா நகரில், காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்தும், இளைஞர் ஒருவர் விடாமல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் மாடல் என்றால் என்ன.?
இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதில், திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் புகுந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக இருக்கின்றன என விமர்சித்துள்ளார்.
அதோடு, காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனதை முதலமைச்சர் எப்படி விளக்குவார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது கிஞ்சற்றும் பயம் இல்லாமல் போனதற்கு காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும், மேடைதோறும் தன்னைப் பற்றி அவதூறு பேசுவதிலும், இல்லாத விஷயத்தை வைத்து அரசியல் செய்வதிலும் இருக்கும் முனைப்பு, ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் ஒருநாளாவது மக்களைக் காப்பதில், சட்டம் ஒழுங்கை சீர்செய்வதில் இருந்ததுண்டா இந்த முதலமைச்சருக்கு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவலர் குடியிருப்பில் புகுந்து கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துவதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் புகுந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 10, 2025
ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க…





















