![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Weather Update: இன்று வெப்பநிலை எப்படி இருக்கும்? கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்ன தெரியுமா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..
கோடை மழை காரணமாக தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து பதிவாகி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
![TN Weather Update: இன்று வெப்பநிலை எப்படி இருக்கும்? கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்ன தெரியுமா? இன்றைய வானிலை நிலவரம் இதோ.. Due to summer rains, the temperature in Tamil Nadu is decreasing. And in the last 24 hours eight districts have crossed 100 degrees Fahrenheit. TN Weather Update: இன்று வெப்பநிலை எப்படி இருக்கும்? கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்ன தெரியுமா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/24/d36786811f159bb2f6db210c686fc15a1684894678524589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த வரும் சில தினங்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோடை மழை காரணமாக தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து பதிவாகி வருகிறது.
23.05.2023 முதல் 27.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருத்தணியில் – 39 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் – 39 டிகிரி செல்சியஸ், திருச்சியில் – 38.7 டிகிரி செல்சியஸ், மதுரையில் – 38.4 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் – 37.8 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் – 37.8 டிகிரி செல்சியஸ், சேலம் – 37.3 டிகிரி செல்சியஸ், நாகையில் – 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் – 38.4 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்றும் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் குறைவாக தான் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயிலின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதாவது ஒரு சில மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடக்கத்திலிருந்தே நல்ல மழை பதிவாகி வருகிறது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையும் குறைவாகவே உள்ளது. ஆனால் வெயிலினால் ஏற்படும் உஷ்னம் அதிகமாக உணரப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ள அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஊடச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Anirudh - Indian 2: இந்தியன் 2 பாடல் கம்போசிஷன்... ஷங்கருடன் செம்ம வைபிங் செய்யும் அனிருத்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)