மேலும் அறிய

திராவிட மாடல் ஆட்சியில்தான் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டது - அமைச்சர் ராமச்சந்திரன்

ஜவ்வாது மலை கோடை விழாவில் ஜமுனா மரத்தூர் முதல் அமிர்தி வரையில் 257 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஜவ்வாது மலையில் 24-வது கோடை விழா இன்று மற்றும் நாளை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் 24-து கோடை விழாவை தொடங்கி வைத்து தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, பள்ளிக்கல்வித்துறை, மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன் 

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் சிறப்பான திராவிட ஆட்சி நடைபெற்று வருகிறது., குறிப்பாக தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 82 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை தமிழகம் பெறும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

திராவிட மாடல் ஆட்சியில்தான் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டது - அமைச்சர் ராமச்சந்திரன்

இந்தியாவிலேயே சுற்றுலாத் துறையில் தமிழகம் தான் நம்பர் ஒன்

 இந்தியாவிலேயே தமிழகம் தான் நம்பர் ஒன் சுற்றுலாத்தலமாக உள்ளது. வெளிநாட்டு மக்கள் மற்றும் வெளி மாநில மக்களை ஈர்த்து வருவதாகவும், அதேபோல் சுற்றுலாத்துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளையுமே நம்பர் ஒன் துறைகளாக தமிழகத்தை மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரப்பட்டுகிறுது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேஷ் மாநில வரிசையில் மூன்றாவது ஆக தமிழகம் தற்போது ஆன்மீக சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது முன்னோர்கள் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களை அமைத்து அந்த கோயில்களில் கட்டிடக்கலை, சிற்பக் கலைகளை நுணுக்கமான முறையில் அமைத்ததன் விளைவாகத்தான் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல பல உலக நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. 

திராவிட மாடல் ஆட்சியில்தான் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டது - அமைச்சர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வருகை 

குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டுகளில் இரண்டு லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன் மூலம் சுற்றுலாத்துறைக்கும் வருமானம் பெருகி உள்ளதாகவும், அரசுக்கும் வரி வருவாய் அதிகரித்துள்ளதாகவும்  கூறினார். சுற்றுலாத் துறையில் தமிழகம் மேலும் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக தற்போது இந்த திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின் சுற்றுலாத் துறையில் 2000 கோடி ரூபாய் அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,  அரசுத் துறையின் மூலம் மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு கொண்டு வருகிறது என  தெரிவித்தார்.

திராவிட மாடல் ஆட்சியில்தான் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டது - அமைச்சர் ராமச்சந்திரன்

இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தற்போது பல்வேறு செயல்பாடுகளை செய்துள்ளதாகவும், குறிப்பாக மேடை ஏறி பயனாளிகள் பயன்படும் வகையில் இருந்தாலும், இந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக திருவண்ணாமலை மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் ஜமுனாமத்தூர், கல்லவராயன் மலை உள்ளிட்ட மலைகள் இருக்கின்றது., கால் கடுக்க நடந்து பொதுமக்கள் மனு அளித்து வந்தார்கள், ஜாதி சான்று கேட்டு தாலுகா அலுவலங்களில் மனு அளித்து வந்ததாகவும், இந்த மாவட்டத்தில் 7222 பயனாளிகளுக்கு பல்வேறு ஆணைகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது., அதிலும்  5125 மலைவாழ் மக்கள் என்ற ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது., ஜவ்வாது மலையில் எங்கும் மின்சாரம் இல்லாத நிலையை இருந்து வந்தது. அப்படி இருந்த மலைக்கு முதன் முதலில் மறைந்த பே.சுதிருவேங்கடம் என்ற நபர் ஜவ்வாது மலைக்கு மின்சார இணைப்பை பெற்று தந்தார்., 12-4-2022ம் ஆண்டு ஜமுனாமரத்தூர் முதல் அமிர்தி வரை சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்ற அரசாணை பெற்று தந்தார்.,

திராவிட மாடல் ஆட்சியில்தான் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டது - அமைச்சர் ராமச்சந்திரன்

ஜமுனா மரத்துர்  முதல் அமிர்தி வரையில் புதிய சாலை அமைக்கும் பணி

இந்த பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பப்பட்டு 70 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஜமுனாமரத்தூர் முதல் அமிர்தி சாலை வரை எங்கெங்கு பாலங்கள் கட்ட வேண்டும், தடுப்புகள் கட்ட வேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த ஆய்வில் 387 சிறு பாலங்கள், 26 கொண்டை ஊசி வளைவுகள், 45 இடத்திற்கு மேல் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தப் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள 275 கோடி ரூபாய் அரசு பணம் தேவைப்படுவதாகிறது. இது குறித்து தலைமை பொறியாளர் சந்திரசேகர் என்பவர் தற்போது ஜமுனாமரத்தூர் முதல் அமிர்தி சாலை வரை சாலை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் ஜமுனாமரத்தூர் முதல் போளூர், போளூர் முதல் ஜமுனாமரத்தூர் மற்றும் ஜமுனாமரத்தூர் முதல் மேல்பட்டு வரை இரண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை
Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை
Embed widget