IAS Transfer: சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ராதாகிருஷ்ணன்..! யார் இந்த ராதாகிருஷ்ணன்..
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் கூட்டுறவு துறை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாநகராட்சி ஆணையராக இருந்த ககன் தீப் சிங் சுதாதார துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் தனி செயலாளர் உட்பட சில முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, உள்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராக இருக்கும் அமுதா, உள்துறைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமுதா நிர்வகித்து வந்த ஊரக வளர்ச்சித்துறை செந்தில்குமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவரைத் தொடர்ந்து, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் நிதித்துறைச் செயலாளராக நியமணம் செய்துள்ளனர். தற்போது நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்றிருக்கும் நிலையில்தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு தற்போது நிதித்துறைச் செயலாளராக இருக்கும் முருகானந்தம் நியமணம் செய்துள்ளனர்.
இதில் முக்கியமாக பார்த்தால் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் கூட்டுறவு துறை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாநகராட்சி ஆணையராக இருந்த ககன் தீப் சிங் சுதாதார துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த ராதாகிருஷ்ணன்?
பள்ளி படிப்பை முடித்துவிட்டு கால்நடை மருத்துவ படிப்பை பயின்று மருத்துவராக பணியாற்றினார். ஆனால் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அதற்கான பயிற்சியை மேற்கொண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனார். அதிகாரிகளுக்கே உரிய மிடுக்கை உடைத்து மக்கள் எளிதில் அணுகும் முறையை பின்பற்றினார். சேலம், தஞ்சை, நாகை என பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
2003 ஆம் ஆண்டில் கும்பகோணம் பள்ளி விபத்தில் 90 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. இருப்பினும் அந்த சூழ்நிலையை மிகவும் பொருமையாக கையாண்டார் மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன். அதேபோல் 2004ஆம் ஆண்டு சுனாமியால் நாகை மாவட்டம் சிதைந்த போது மீட்பு பணிகளை ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. நிவாரண பணிகளிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் ராதாகிருஷ்ணன் காட்டிய வேகத்தை பார்த்து அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனே இவரை பாராட்டினார்.
அதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என அனைத்தையும் மிகவும் நிதானமாக கையாண்டவர் ராதாகிருஷ்ணன். சிறப்பாக செயல்பட்டத்தற்கு மக்கள் மத்தியில் அவருக்கென்று ஒரு தனி இடம் இருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் அவர் கூட்டுறவு துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். கூட்டுறவு துறையில் ரேஷன் பொருட்களை பதுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ராதாகிருஷ்ணனை எப்போதும் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எளிமையாக அணுக முடியும் என்பதால், இப்போது அவர் மாநகராட்சி ஆணையராக நியமணம் செய்யப்பட்டுள்ளது பாராட்டும், வரவேற்பும் பெற்றுள்ளது.
மேலும் தற்போது தலைமைச் செயலாளராக பதவி வகித்து வரும் இறையன்பின் பதவிக்காலம் விரைவில் முடிவடையுள்ள நிலையில், சிவதாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பல துறை செயலாளர்கள் மாற்றப்படுவதோடு, இரண்டு ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.