பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவுப்பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் விடுதிகளில், ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் விடுதிகளில், ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். உணவு செலவுக்கான மானியத்தில் மாற்றம் இல்லாமல், உணவு வகைகளை மாற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
#BREAKING | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியிலில் தோசை, இடியாப்பம் சேர்ப்புhttps://t.co/wupaoCQKa2 | #TNGovt #Hostel pic.twitter.com/3HCOWUxBLV
— ABP Nadu (@abpnadu) April 4, 2022
இதில், தோசை மற்றும் இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகளும் சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சேமியா, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் போன்ற உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், இத்துடன், சாம்பார், சட்னியுடன் தோசை அல்லது நவதானிய தோசை, பட்டாணி குருமா அல்லது தேங்காய் பாலுடன் இடியாப்பம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக, போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரை சாதியை சொல்லி திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அவர் பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு அமைச்சராக மாற்றப்பட்டார்.
பிற முக்கியச் செய்திகள்:
அதிகரித்த கேஸ் சிலிண்டர் விலை.. ஹோட்டல்களில் அதிகரிக்கும் உணவு வகைகளின் விலை.. அதிர்ச்சியில் மக்கள்..#Gascylinderhttps://t.co/Z9g0fNUYMR
— ABP Nadu (@abpnadu) April 4, 2022
நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இப்படித்தான்.. இங்கு மதவெறிக்கு இடமில்லை -பழனிவேல் தியாகராஜன்#PTRPalanivelThiagarajan #FMPTRhttps://t.co/oFqDGpT5Lx
— ABP Nadu (@abpnadu) April 4, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

