மேலும் அறிய

Private Bus: தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது: அரசுப் பேருந்துகளை இலவசமாக இயக்குக- அன்புமணி

சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது என்றும் அரசுப் பேருந்துகளை கூடுதலாக, இலவசமாக இயக்க வேண்டும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார். 

சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது என்றும் அரசுப் பேருந்துகளை கூடுதலாக, இலவசமாக இயக்க வேண்டும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’சென்னையில் அடுத்த ஆண்டிற்குள் 1000 தனியார் பேருந்துகளை, மாநகர போக்குவரத்துக் கழகத்தின்  பெயரில் இயக்கும் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை திட்டவட்டமாக மறுக்காத போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், மழுப்பலான விளக்கத்தை அளித்திருக்கிறார். தனியார் பேருந்துகளை எந்த வடிவத்திலும் இயக்க முனைவது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்குவதில் தான் முடியும் என்பதால், அது குறித்து தமிழ்நாடு அரசு சிந்திக்கவே கூடாது.

எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 1000 தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளியாகிருந்த செய்தி பொதுமக்கள் மத்தியிலும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியிலும் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. மாறாக, இப்போதே தனியார் பேருந்துகள் இயக்கப்படாது; அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்காகவே ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருக்கிறது; அதன் அறிக்கையை ஆய்வு செய்த பிறகே தனியார் பேருந்துகளை இயக்குவது பற்றி முடிவெடுக்கப்படும் என விளக்கம் அளித்திருக்கிறார்.

அதே நேர்காணலின் பின்பகுதியில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அதனால் இலவச பயணச் சலுகை ரத்து செய்யப்படாது என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவிருப்பதை தம்மையும் அறியாமல் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் எந்த வகையிலும் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். தனியார்மயத்தை பா.ம.க. கடுமையாக எதிர்க்கும்.

உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு செய்து கொண்டுள்ள மொத்த செலவு ஒப்பந்தம் (Gross Cost Contract) தான் அனைத்துக்கும் காரணம். அதன்படி 2022ஆம் ஆண்டில் 500 பேருந்துகளும், 2024ஆம் ஆண்டுக்குள் மேலும் 500 பேருந்துகளும்  மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும். ஆனால், இந்த பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்காது; மாறாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம் தான் புதிய பேருந்துகளை இயக்கும். புதிய பேருந்துகளை தனியார் நிறுவனத்தின் ஓட்டுனர், நடத்துனர்கள் தான் இயக்குவர். அவற்றுக்கு மாதம் ஒரு தொகையை போக்குவரத்துக் கழகம் வாடகையாக செலுத்தும். இதை தமிழக அரசும் போக்குவரத்துத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் ஒப்புக்கொண்டிருக்கிறது.

தனியார்மயமாக்கப்படும் ஆபத்து

முதலில் சென்னையிலும், பின்னர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் மொத்த செலவு ஒப்பந்த முறையை நீட்டிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. முதலில் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படும். அடுத்தக்கட்டமாக ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் போது, அவையும் இதே முறையில் இயக்கப்படும். ஒரு கட்டத்தில் அனைத்து பேருந்துகளும் தனியாரால் இயக்கப்படும். அப்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படும். இலவச, மானியக் கட்டண சலுகைகள் தொடரும் என்றாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவையும் திரும்பப் பெறப்படக் கூடும். இத்தகைய ஆபத்து இருப்பதால் தான் இந்தத் திட்டத்தை பா.ம.க. கடுமையாக எதிர்க்கிறது.

மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான போக்குவரத்தை அரசே நடத்த வேண்டும் என்பதற்காகவே தனியார் பேருந்துகள் கலைஞர் காலத்தில் அரசுடைமையாக்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிரான வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது.

சென்னை போன்ற நகரங்களில் ஊர்திகளின் பெருக்கத்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இரு சக்கர ஊர்திகளும், மகிழுந்துகளும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதால்  அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கான ஒரே தீர்வு பொதுப்போக்குவரத்தை  வலுப்படுத்துவது தான். அதற்காக மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை இப்போதுள்ள 3453-ல்  இருந்து படிப்படியாக 7 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அனைத்து பேருந்துகளையும் இலவசமாக இயக்க வேண்டும். அதன் மூலம், சென்னையில் தனியார் ஊர்திகளின் எண்ணிக்கையை குறைத்து விபத்துகளையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
அனைத்தும் தனியார்மயமா? - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அனைத்தும் தனியார்மயமா? - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget