Priya vs Pallavi: பிரியா வர்றது பிளான்லயே இல்ல; அவமானப்படுத்ததான் ஸ்கூலுக்கு வந்தாங்க; பல்லவி பரபரப்பு பேட்டி
யார் மீது தவறு என்று தவெக, திமுக ஆகிய இரு தரப்பினரும் தீவிரமாக விவாதித்து வரும் நிலையில், நடந்தது என்ன என்பது குறித்து எம்எல்ஏ பல்லவி பேட்டி அளித்துள்ளார்.

தன்னை அவமானப்படுத்தும் நோக்கிலேதான் மேயர் பிரியா, பள்ளி நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் பள்ளியில் வீரத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை எனவும் எம்எல்ஏ பல்லவி தெரிவித்துள்ளார்.
மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி இடையிலான மோதல்தான் இன்று சோஷியல் மீடியாவின் ஹாட் டாபிக். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கட்டிடத் திறப்பு விழாவில் மேயர் பிரியா குத்துவிளக்கு ஏற்ற மெழுகுவர்த்தியை எம்எல்ஏ பல்லவியிடம் கொடுக்கவில்லை. இது சர்ச்சையான நிலையில், இரண்டாவது பள்ளி நிகழ்ச்சியில் மேயர் பிரியா கொடுத்த மெழுகுவர்த்தியை எம்எல்ஏ பல்லவி வாங்கவில்லை.
அசிங்கப்படுத்தினாரா, புரோட்டோகாலா?
அசிங்கப்படுத்திய மேயர் பிரியாவை, அழகாக ஹேண்டில் செய்தார் எம்எல்ஏ பல்லவி என்று தவெக தரப்பு பேசி வரும் நிலையில், இதை இவ்வளவு பெரிய பிரச்சினையாக எம்எல்ஏ பல்லவி கருதியிருக்க வேண்டியதில்லை, முதல் நிகழ்ச்சியில் புரோட்டோகால்படியே மேயர் பிரியா அவ்வாறு நடந்துகொண்டார் என திமுகவினர் களமாடி வருகின்றனர்.
யார் மீது தவறு என்று தவெக, திமுக ஆகிய இரு தரப்பினரும் தீவிரமாக விவாதித்து வரும் நிலையில், நடந்தது என்ன என்பது குறித்து எம்எல்ஏ பல்லவி பேட்டி அளித்துள்ளார்.
அவர் தனியார் தொலைக்காட்சி ஊடகத்திடம் பேசும்போது கூறியதாவது:
’’முதலில் நேற்று இரவு வரை மேயர் பிரியா நிகழ்ச்சிக்கு வருவது உறுதியாகவே இல்லை. எனக்குக் குழந்தை பிறந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அதனால் வரமாட்டேன் என்று நினைத்தார்போல.
எனினும் பள்ளி நிகழ்ச்சி என்பதால் நான் வருவதாக ஒப்புக்கொண்டேன். நான் வருவது தெரிந்ததும் மேயர் பிரியாவும் வருவதாகக் கூறி இருக்கிறார். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுத்தான் அவர் அங்கே வந்தார்.
கட்டிடத் திறப்புக்கு இரண்டு ரிப்பன் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்தது. எனினும் மேயர் பிரியா முன் வரிசையில் தன் ஆட்களை நிற்க வைத்துவிட்டார். நான் பின் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.
குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியிலும் மெழுகுவர்த்தியை என்னிடம் கொடுக்கவில்லை. போட்டி போட்டு அங்கே இருக்க வேண்டும் என்று இல்லை என்பதாலேயே கிளம்பிவிட்டேன். பள்ளி நிகழ்ச்சியில் நம் வீரத்தை காட்ட வேண்டும் என்று அவசியமில்லை. அதற்கான இடமும் இல்லை. அதிகாரிகளும் நாங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை.‘’
இவ்வாறு ஆர்.கே.நகர் எம்எல்ஏ பல்லவி தெரிவித்துள்ளார்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்























