காலி சேர்களுக்கு கதை சொன்ன அமைச்சர்.. திமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசிக்கொண்டிருந்தபோதே மக்கள் கலைந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலி இருக்கைகளுக்கு முன்பு நின்று அமைச்சர் பேசுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செங்கல்பட்டு அச்சரப்பாக்கத்தில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசிக்கொண்டிருந்தபோதே மக்கள் கலைந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலி இருக்கைகளுக்கு முன்பு நின்று அமைச்சர் பேசுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பு:
அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக சார்பாக பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், உத்திரமேரூர் திமுக எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: Magalir Urimai Thogai: விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை - சூப்பர் அப்டேட் கொடுத்த முதலமைச்சர்
இதற்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் பெரிய கருப்பன் மிகவும் காலதாமதமாக இரவு 9 மணிக்கு மேல் வந்ததாகக் கூறப்படுகிறது.
காலி சேர்களுக்கு கதை சொன்ன அமைச்சர்:
இதனால், அச்சரபாக்கம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்கள், இரவு நேரத்தை கருத்தில் கொண்டு, அமைச்சர் பெரிய கருப்பன் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து கலைந்து சென்றனர். அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோதே மக்கள் கலைந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியினர் அமருவதற்காக போடப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. மக்கள் கூட்டம் கலைந்து செல்வதையும் பொருட்படுத்தாமல் காலி சேர்களுக்கு அமைச்சர் கதை சொல்லிக் கொல்லி இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் அடித்து வருகின்றனர். பொதுக்கூட்டத்தில் ஆட்கள் குறைவாக இருந்ததால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மீது அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: PTR Abt. Internet: என்னது.. மாசம் இவ்ளோ கம்மி விலைல வீடுகளுக்கு இன்டர்நெட்டா.? அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு...





















