திருவண்ணாமலை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் என்ன?
மாவட்டத்தில் முதலில் தடுப்பூசியின் குறித்து விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசிகள் வீணானதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்கவே, கிராமப்புறங்களில் தண்டோரா மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது . தேர்தல் முடிவுகள் வெளியாகி, பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சியை பிடித்தது. வழக்கம்போல திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குகள் திமுகவிற்கு சாதகமாக அமைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில், திமுக ஆறு இடங்களில் வெற்றிபெற்றது, அதிமுக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது ஒருமாதத்தில் திமுக அரசின் நடைமுறைப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் என்னென்ன என்ற அலசல்தான் இது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் ஏ.வ.வேலு நியமிக்கப்பட்டார். இதைப்போல கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக லட்சுமி பிரியா IAS மற்றும் சந்திப் நந்தூரி IAS நியமிக்கப்பட்டார்கள். மே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்தது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. குறிப்பாக ஆக்சிஜன் படுக்கைகள் உடனே அதிகரிக்கப்பட்டன. திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி படுக்கைகளுக்காக ஆம்புலன்சில் நோயாளிகள் ஒரு சில மணி நேரம் காத்திருக்கும் நிலை நீடித்தது. படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டாலும், ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவியது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை காத்திருப்பதை தவிர்ப்பதற்காக புதியதாக மாவட்டத்தில் 15 இடங்களில் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதேபோல உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பால் மின்மயானங்களில் உடல்களை எரியூட்ட மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் இடங்கள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகள் ஏற்படுத்தவும் ஆக்சிஜன் குடோனாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணித்தல், புதிய சிகிச்சை மையங்கள், ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்துதல், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து வீடு வீடாக கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதேபோல தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துவந்த நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை உரிமம் தரப்பட்டது
திமுக ஆட்சியில் சில இடங்களில் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி மற்றும் நாடாளுமற்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு உணவு, கபசுரக் குடிநீர், மாஸ்க் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவை வழங்கும் பணிகளில் ஈடுபடும் திமுக சட்டமன்றஉறுப்பினர்களளிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்களிடம் மனு அளித்து வருகின்றனர். திருவண்ணாமலை அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் மற்றும் மாவட்டத்தில் ரெம்டடெசிவர் மருந்து விற்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் வாங்குவதற்கு வெளி மாவட்டத்திற்கு சென்றனர். இதனால் அவசரத் தேவைகளுக்கு அம்மருந்தை வாங்க முடியாமல் பலர் பரிதவித்தனர். நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருத்துகளை அரசே மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கினர் அதில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றவற்கள் கைது செய்யப்பட்டனர்
மாவட்டத்தில் முதலில் தடுப்பூசியின் குறித்து விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசிகள் வீணானதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்கவே, கிராமப்புறங்களில் தண்டோரா மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டினார்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக இரண்டு இடங்களில் வெற்றிபெற்றது. இதுவரையில் இரண்டு உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேவூர் ராமச்சந்திரன் எடுத்துவரும் நடவடிக்கைகளில், அவர்களின் தொகுதியில் ஆக்சிஜன் படுக்கைகள் வசதி ஏற்படுத்தி கொடுத்தனர் மற்றும் சொந்த செலவில் ஆக்சி மீட்டர் தொற்று ஏற்பட்டவர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனால் மக்களிடம் நற்மதிப்பையும் பெற்றனர்.
ஊரடங்கால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு ஊர் அடங்கு முடியும் வரை தினமும் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் சொந்த செலவில் உணவு இட்லி, பொங்கல் மற்றும் அனைவருக்கும் தண்ணீர் கேன் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா இரண்டாவது அலை வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற காவலர்கள், ஊர்க்காவல் படை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், 108 மருத்துவ செவிலியர்கள் பணியாளர்கள், எரி மேடை தகனம் பணியாளர்கள், திருநங்கைகள், தன்னார்வலர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், சாலையோர மக்கள், சாமியார்கள், ஏழை எளிய பொதுமக்கள் என அனைவருக்கும் உணவுகள் மற்றும் தண்ணீர் கேன் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை, முதல் வாக்குறுதியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாடவீதி சுற்றிலும் சிமென்ட் சாலை அமைக்கப்படும் என கூறினார். அதனை நிறைவேற்றும் வகையில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை மாற்றம் செய்து, அதற்குப் பதிலாக மாவட்டத்துக்கு புதியதாக ஐபிஎஸ் அதிகாரி பவுன்குமார் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.