Annamalai DMK Files: திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை இன்று வெளியிடுவதாக அண்ணாமலை ட்வீட்
தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை, புகார்களுடன் அண்ணாமலை இன்று வெளியிடுகிறார். சென்னை கமலாலயத்தில் இதனை ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை, புகார்களுடன் அண்ணாமலை இன்று வெளியிடுகிறார். சென்னை கமலாலயத்தில் இதனை ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் தென்காசியில் நடந்த கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்படும். அப்படி வெளியிடும்போது மக்கள் இன்னும் சந்தோஷத்தில் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுவார்கள் என தெரிவித்திருந்தார்.
திமுகவின் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரின் சொத்து பட்டியல் வெளியிடப்படும் என்றும் சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். இதன்படி இன்று காலை 10.15 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்த பட்டியலை வெளியிட உள்ளார். இதற்காக கமலாலயத்தில் பெரிய திரை ஒன்று அமைக்கப்படும் என்றும் அந்த திரையில் இந்த பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் செய்தியாளர்களை சந்திக்காமல் திரையில் பேசுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DMK Files
— K.Annamalai (@annamalai_k) April 13, 2023
April 14th, 2023 - 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். 10 நொடிகள் கொண்ட வீடியோ DMK Files என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, எம்.பி தயாநிதி மாறன், மு.க. அழகிரி, அழகிரியின் மகன் துரை ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த ட்வீட்டில் ஏப்ரல் 14ஆம் தேதி காலை 10.15 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் சூழலில் பாஜகவிலிருந்து தொடர்ச்சியாக நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். நேற்றைய தினம் மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு என்பவர் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறி ராஜினாமா செய்தார். இதற்கு முன் ஐ.டி விங் பிரிவில் 13 பேர் மொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று அண்ணாமலை திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிடுகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பாஜக சார்ப்பில் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து 70 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் காங்கிரஸ் என்றால் ஊழல் என்று அர்த்தம் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு ஊழல்களில் 4லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் சுரண்டியுள்ளதாக சாடியதோடு, காங்கிரஸ் அந்த தொகையை வைத்து பல்வேறு முன்னேற்ற திட்டங்களை வகுத்திருக்கலாம் என்றும் குற்றம் சாட்டிருந்தது. ஆனால் பாஜக வெளியிட்ட இந்த ஊழல் புகார் பெரிய அளவில் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.