Annamalai Vs DMK LIVE: அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - ஆர்.எஸ்.பாரதி
DMK Files Annamalai LIVE Updates: தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை, புகார்களுடன் அண்ணாமலை இன்று வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். அவர் பேசியவை குறித்த தகவல்கள் இங்கே..
LIVE
Background
Annamalai DMK Files LIVE UPDATE
தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை, புகார்களுடன் அண்ணாமலை இன்று வெளியிடுகிறார். சென்னை கமலாலயத்தில் இதனை ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் தென்காசியில் நடந்த கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை திமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்படும். அப்படி வெளியிடும்போது மக்கள் இன்னும் சந்தோசத்தில் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுவார்கள் என தெரிவித்திருந்தார்.
திமுக –வின் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எமிபிக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரின் சொத்து பட்டியல் வெளியிடப்படும் என்றும் சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். இதன்படி இன்று காலை 10.15 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்த பட்டியலை வெளியிட உள்ளார். இதற்காக கமலாலயத்தில் பெரிய திரை ஒன்று அமைக்கப்படும் என்றும் அந்த திரையில் இந்த பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் செய்தியாளர்களை சந்திக்காமல் திரையில் பேசுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DMK Files
— K.Annamalai (@annamalai_k) April 13, 2023
April 14th, 2023 - 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார். 10 நொடிகள் கொண்ட வீடியோ DMK Files என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, எம்.பி தயாநிதி மாறன், மு.க. அழகிரி, அழகிரியின் மகன் துரை ஆகியோரின் புகைப்படங்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அந்த டிவீட்டில் ஏப்ரல் 14ஆம் தேதி காலை 10.15 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் சூழலில் பாஜகவிலிருந்து தொடர்ச்சியாக நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். நேற்றைய தினம் மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு என்பவர் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறி ராஜினாமா செய்தார். இதற்கு முன் ஐ.டி விங் பிரிவில் 13 பேர் மொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று அண்ணாமலை திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியொடுகிறார்.
ஆருத்ரா மோசடியில் 84 கோடி ரூபாயை அண்ணாமலை நேரடியாக பெற்றிருக்கிறார். திசைதிருப்ப நாடகம் - ஆர்.எஸ்.பாரதி
ஆருத்ரா மோசடியில் 84 கோடி ரூபாயை அண்ணாமலை நேரடியாக பெற்றிருக்கிறார். திசைதிருப்ப நாடகம் - ஆர்.எஸ்.பாரதி
பிரதமர் மோடியையும், நிர்மலா சீதாராமனையும் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறாரா அண்ணாமலை? - ஆர்.எஸ்.பாரதி
பிரதமர் மோடியையும், நிர்மலா சீதாராமனையும் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறாரா அண்ணாமலை? - ஆர்.எஸ்.பாரதி
ஆருத்ரா வழக்கில் அண்ணாமலை சிறை செல்வார் - ஆர்.எஸ்.பாரதி
ஆருத்ரா வழக்கில் அண்ணாமலை சிறை செல்வார் - ஆர்.எஸ்.பாரதி
திமுகவின் சொத்து என கூறியதற்கான ஆவணங்களை, அண்ணாமலை 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி
திமுகவின் சொத்து என கூறியதற்கான ஆவணங்களை, அண்ணாமலை 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலைக்கு உண்மையைச் சொல்லி பழக்கமில்லை - ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலைக்கு உண்மையைச் சொல்லி பழக்கமில்லை - ஆர்.எஸ்.பாரதி