Diwali Bus: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்! தீபாவளிக்காக சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்!
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 5 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் விழா காலங்கள் என்றாலே வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் கொண்டாடுவதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
3 நாட்களில் 5 லட்சம் பேர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். சென்னையில் மட்டும் 3 நாட்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (30.10.2024) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2092 பேருந்துகளும்,
— ArasuBus (@arasubus) October 31, 2024
2,172… pic.twitter.com/WMQHJKRxZB
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தால் நேற்று நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 172 சிறப்பு பேருந்துகள் என கடந்த 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை இரவு 12 மணி வரை மொத்தம் 10 ஆயிரத்து 784 பேருந்துகளில் மொத்தம் 5 லட்சத்து 76 ஆயிரத்து 358 பயணிகள் பயணித்துள்ளனர்.
நாளை முதல் சிறப்பு பேருந்துகள்:
சென்னையில் இருந்து மட்டும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்புவதற்காக அரசு சார்பில் சுமார் 9 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.
அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகள், ரயில்கள், கார்கள் என மொத்தம் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.