மேலும் அறிய

DVAC Raid: தங்கம் மட்டுமே 4.8 கிலோ.. 136 கனரக வாகனம்.. விஜயபாஸ்கர் வீட்டு ரெய்டில் சிக்கியவற்றின் லிஸ்ட்.!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டில்  ரொக்கமாக ரூ.23,85,700 பணமும், 4.8 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தங்க நகைகளின் மதிப்பு ரூ. 2.17 கோடி ஆகும்.

மேலும், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டது. அது தொடர்பாக ரூ.23, 82,700 பணமும், ஹார்டு டிஸ்குகளும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்

முன்னதாக,2016-21 வரையிலான ஐந்து ஆண்டு காலகட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திட்டமிட்டு வருமானத்துக்கு அதிகமான வகையில் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில், விஜயபாஸ்கர் முதல் குற்றவாளியாகவும், அவரின் ரம்யா இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

DVAC Raid: தங்கம் மட்டுமே 4.8 கிலோ.. 136 கனரக வாகனம்.. விஜயபாஸ்கர் வீட்டு ரெய்டில் சிக்கியவற்றின் லிஸ்ட்.!

இந்நிலையில், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, அவரது மூத்த மகள் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் போது, மனிதாபிமானமற்ற முறையில் சோதனை நடைபெற்று வருவதாக அதிமுக வழக்கறிஞர்  பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.  

இருப்பினும், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, அவரது மூத்த மகள் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உண்மைதான் என்றாலும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் காலத்தில் இருந்து நேற்று தான் அவர்கள் வெளியே வந்தார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட முதல் தகவல் அறிக்கையின் படி,  முதல் குற்றவாளியான விஜயபாஸ்கர்  M/s Rasi Blue Metals என்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும்,  M/s. Green land Hi-tech Promoters  என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும், Sri Vari Stones (p) Ltd and Iris Eco Power venture (p) Ltd ஆகிய நிறுவனங்களின் முதலீட்டாளராகவும் உள்ளார். 

இரண்டாவது குற்றவாளியான ரம்யா அவரின் துணைவியர். இல்லத்தரசியான இவர் M/s. Rasi Enterprises, V Infrastructure and Anya Enterprises ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார். ஆனால், இந்த நிறுவனங்களின் ஒற்றை முதலீட்டாளாராக விஜயபாஸ்கர் உள்ளார்.       

2016- 21 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் மட்டும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் 57 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையியனர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில், இழுப்பூர் கிராமத்தில் விஜயபாஸ்கரின் குடும்ப உறுப்பினர்கள் பேரில் மதர் தெரசா கல்வி மற்றும் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் 14 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் கணக்கில் காட்டப்படாத பணத்தின் மூலம் தான் இந்த கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.    

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Embed widget