மேலும் அறிய

Vandita Pandey IPS : காவல்துறையே அலறவிட்டவர் புதுக்கோட்டை எஸ்.பியாக நியமினம் - யார் இந்த வந்திதா பாண்டே?

இந்திய காவல்துறையில் அதிரடிக்கு பெயர் போன பெண் அதிகாரிகளில் வந்திதா தான் சார்ந்த துறைகளில் இருப்பவர்களிடம் கூட பாரபட்சம் பார்க்காமல் நேர்மையாக நடப்பவர். 

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைப்பற்றிய கடந்த கால பணியிட அனுபவங்கள் தெரிந்தால் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுவது நிச்சயம்...!

இந்திய காவல் துறையில் அதிரடிக்கு பெயர் போன பெண் அதிகாரிகளில் வந்திதாவும் ஒருவர். உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த இந்த பெண் ஐபிஎஸ் தமிழக கேடரில் 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ஜைச் சார்ந்தவர். தமிழகத்தில் பல இடங்களில் பணியாற்றி மக்களிடம் நல்ல பெயரை பெற்ற இவர் தான் சார்ந்த துறைகளில் இருப்பவர்களிடம் கூட பாரபட்சம் பார்க்காமல் நேர்மையாக நடப்பவர். 

இதனால் பலமுறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டாலும் தன் நேர்மையிலும் இருந்து சிறிதும் விலகாமல் இருந்த வந்திதா உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட  சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்களால் சிவகங்கை சிறுமி ஒருவர் பாலியல் வன்கிடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் நேரடியாக சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று அதனை சட்டப்படி பதிவு செய்தார். இதன் காரணமாக அவர் கரூருக்கு மாற்றப்பட்டார். 

இதன்பின்2016  ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  நத்தம் விஸ்வநாதன் பினாமி என கூறப்பட்ட அதிமுக பிரமுகர் அன்புநாதனிடம் இருந்து ரூ.5 கோடி பணத்தை பறிமுதல் செய்த  நிலையில் அவரை கொல்ல முயற்சி நடந்ததாகவும், வந்திதா தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாகவும் பல தகவல்கள் வதந்தியாக பரவிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

உதவி காவல் கண்காணிப்பாளராக 2013-14 ஆம் ஆண்டுகளில் சிவகாசியிலும், 2014-15 ஆம் ஆண்டு சிவகங்கையிலும், பின்  2015-16 ஆம் ஆண்டில் காவல் கண்காணிப்பாளராக கரூரிலும் பணியாற்றினார். அதன்பின் 2016-17 ஆம் ஆண்டில் ராஜபாளையம் பட்டாலியனிலும், 2017-19 ஆண்டில் ஆவடி பட்டாலியனிலும், 2019-21 ஆம் ஆண்டில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பியாகவும், அதனைத் தொடர்ந்து சென்னை பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
100 நாள் ஆட்சியில் 6 உயிர்கள் பலி - விஜய்யை நேரடியாக தாக்கி சீமான் சொன்னது என்ன?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
Embed widget