மேலும் அறிய

CM Stalin: ”தீ பரவட்டும்..” தமிழக அரசின் தீர்மானத்தை பாராட்டிய கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!

சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை வரவேற்று பாராட்டிய, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை வரவேற்று பாராட்டிய, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ட்வீட்:

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தமிழக அரசின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராட்டியதற்காகவும், எங்கள் குழுவில் இணைந்ததற்காகவும் நன்றி. உண்மையில், எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டமன்றத்தின் இறையாண்மையே உச்சமானது. எந்த 'நியமிக்கப்பட்ட' ஆளுநரும் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' அரசாங்கங்களின் சட்டமன்ற அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது. தீ பரவட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதம்:

இதோடு இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறித்தும் நாட்டின் புகழ்பெற்ற அரசியலமைப்பின் ஒவ்வொரு கோட்பாடும் சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறித்தும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம், தொடர்பான தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அதில்,  "நமது நாட்டின் நலன் கருதி மிக முக்கிய விவகாரம் குறித்து ஸ்டாலின் தனக்கு எழுதிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவில் ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே என்றும், நமது புகழ்பெற்ற அரசியலமைப்பின் ஒவ்வொரு கோட்பாடும் முக்கியமாக, சுதந்திரம், சமத்துவம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம் என அனைத்தும் சமரசத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்றும், நாட்டில் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களையும் உள்ளடக்கிய நமது கூட்டாட்சி அமைப்பானது அனைத்து அதிகாரங்களையும் சட்டத்துக்குப் புரம்பாக பையப்படுத்த முயலும் சக்திகளால் பெரும் ஆபத்தில் உள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

ஜனநாயக அவமதிப்பு:

காலணி ஆட்சியில் இருந்து நாம் சுதந்திரம் அடைந்தபோது, பிரிதல் குறித்த விஷயங்கள் எழுந்த போதிலும், நமது கூட்டாட்சி அரசியல் மற்றும் இந்திய அரசியல் அமைப்பில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக ஓர் ஒன்றிணைந்த தேசமாகவும் ஒருங்கிணைந்த சமூகமாகவும் உருவாகியுள்ளோம். எனினும், இந்தக் கோட்பாடுகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது.

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள்/துணைநிலை ஆளுநர்கள் அம்மாநிலச் சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்படும்  மசோதாக்களை அல்லது டெல்லி அரசால் அனுப்பப்படும் கோப்புகளை எவ்வித ஒப்புதலும் அளிக்காமல் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமல்ல ஜனநாயகத்தின் உச்சமான மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்.

ஆளுநர் செயல்பாடு தடை:

டெல்லி சட்டமன்றத்தின் ஜனநாயக நடைமுறையில் துணைநிலை ஆளுநர் தொடர்ச்சியாகத் தலையிடுவது, டெல்லியின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வதைத் தடுப்பது, இன்னும் ஒரு படி மேலே சென்று அன்றாட நிர்வாகச் செயல்பாட்டை ஸ்தம்பிக்கச் செய்தல் போன்றவற்றால் டெல்லியில் நாங்கள் எதிர்கொள்ளும் நிலைமை மிகவும் மோசமானது என்றும், டெல்லி தேசியத் தலைநகர் ஆட்சிப் பகுதிச் சட்டத்தில், 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தால் டெல்லி மாநில அரசு நிலைகுலைந்துள்ளது.  மருத்துவம், கல்வி, நீர், மின்சாரம், தொழில்கள், நிதி அல்லது உள்கட்டமைப்பு என டெல்லி அரசு பெரும் முன்னேற்றம் அடைய முயலும் அனைத்துத் துறைகளிலும், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் அதற்குத் தடையாக உள்ளது.

மாநில அரசுகள் மற்றும் அவற்றின் ஆளுநர்கள் / துணைநிலை ஆளுநர்கள் என்னும் இடைமுகம் ஒரு போர்க்களமாக ஆக்கப்பட்டு ஒன்றிய அரசால் சத்தமின்றி ஒரு போர் நிகழ்த்தப்பட்டு வரும் சூழ்நிலையில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள்/நுணைநிலை ஆளுநர்கள் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு, அவற்றின் நிர்வாகத்தைத் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப தடுக்கிறார்கள். அவர்கள் ஒன்றிய மற்றும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இடையே அதிகரித்து வரும் பிளவின் அடையாளமாக மாறிவிட்டனர். கூட்டாட்சிக் கூட்டுறவு எனும் கோட்பாட்டை மாநில அரசுகள் மிகவும் மதிக்கின்ற போதிலும், அதற்கு ஒன்றிய அரசால் சொல்லளவிலேயே மதிப்பளிக்கபடுகிறது. இதனால் கெடுவாய்ப்பாக, ஆளுநர்/துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் பொறுப்பு பற்றிய கேள்விகளை மக்கள் எழுப்பும் நிலை உருவாகியுள்ளது. மேலும், எந்தவொரு அரசியலமைப்புச் சட்டப் பதவி வகிப்பவரும் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று எண்ணாக் கூடாது என்றும், இந்தியா சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. என்பதையும், அது ஒன்றிய அரசு மற்றம் அதன் பிரதிநிதிகளின் ஆணையால் நிர்வகிக்கப்படவில்லை என்பதையும் நாம் உறுதியாக முன்னிலைப்படுத்த வேண்டிய தகுந்த நேரம் இதுவாகும். 

இத்தகைய அதிகாரத்தை மையப்படுத்தும் போக்குகளுக்கு எதிராக உறுதியான தங்கள் நிலைப்பாட்டை எடுத்தியம்பும் வகையில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்படிவுகளை ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி, ஒன்றிய அரசையும் இந்தியக் குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தை பாராட்டுவதாகவும், அதே வழியில், ஆளுநர்கள் / துணைநிலை ஆளுதர்கள் தங்களின் அரசியல் சாசனப் பணிகளை மேற்கொள்ள காலக்கெடுவை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இதுபோன்றதொரு தீர்மானத்தை வரும் கூட்டத்தொடரில் டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்வேன் என்றும் மாநில/தேசிய தலைநகரப் பகுதி அரசுகளை சிறுமைப்படுத்த நினைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் கூட்டாக எதிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்” என்றும் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget