Weather Report : இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..! தமிழகத்தில் மழை நிலவரம்.. அப்டேட்ஸ் என்ன?
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 30-ந் தேதி உருவாக வாய்ப்புள்ளது. அது தொடர்ந்து 48 மணிநேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் தாக்கத்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. மழை குறையவே வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை குறைந்துவிடும். அவ்வப்போது மழை இருக்கும்.
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 2 நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 1-ந் தேதி(நாளை) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று மட்டும் 12 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள..
Breaking Live: முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தொட்டது
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்