கடந்தாண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்தது - எஸ்.பி.சுந்தரவதனம்
2021ல், 20 கொலைகள் நடந்த நிலையில், கடந்தாண்டு, 14 கொலைகள் நடந்துள்ளது. அதில் ரவுடிகள் இடையிலான கொலைகள் இல்லை. குற்ற வழக்குகளில் 2 கோடியே 27 லட்சத்து 90 ஆயிரத்து 835 மதிப்பில் பொருட்கள் களவு போனது.
கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு, சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்துள்ளதாக எஸ்.பி. சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை.
கரூர் மாவட்டத்தில் கடந்த, 2021ல், 20 கொலைகள் நடந்த நிலையில், கடந்தாண்டு, 14 கொலைகள் நடந்துள்ளது. அதில் ரவுடிகள் இடையிலான கொலைகள் இல்லை. மேலும், 2021 இல் 230 குற்ற வழக்குகளில் 2 கோடியே 27 லட்சத்து 90 ஆயிரத்து 835 மதிப்பில் பொருட்கள் களவு போனது. கடந்த ஆண்டு 200 குற்ற வழக்குகளில், ஒரு கோடியை, 24,42,975 ரூபாய் மதிப்பில் பொருட்கள் களவு போனது. கடந்த ஆண்டு, திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தில் கடந்த, 2021ல் போக்சோ சட்டத்தின் கீழ், 55 வழக்குகளும், கடந்த ஆண்டு 72 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021 இல் குண்டர் சட்டத்தில் 29 பேர் கைதான நிலையில் கடந்தாண்டு 27 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 10 பேர் குட்கா வழக்கில் கைதானவர்கள்.
சாராய விவாகரத்தில் கடந்த, 2021 இல், 3,047 வழக்குகளில் 5,912 லிட்டர் மதுபானம், 260 லிட்டர் சாராய ஊரல் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் கடந்த 2021 இல் 91.280 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 135.635 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த, 2021, 393 விபத்து வழக்குகளில், 413 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு, 368 வழக்குகளில், 377 பேர் உயிரிழந்தனர். சாலை விழிப்புணர்வு மற்றும் தீவிர வாகன சோதனை காரணமாக கடந்த ஆண்டு, விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளன. கடந்த, ஆண்டு மோட்டார் வழக்குகள் மூலம், 9 கோடியே 81 லட்சத்து, 93 ஆயிரத்து, 558 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்ற தடுப்பு பணிக்காக காவலர் ரோந்து நவீன மயமாக்கல் முறையில், மாற்றம் செய்யப்பட்டு, இ-பிட் நடைமுறை, 108 விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சைபர் குற்றப்பிரிவு மூலம் கடந்த ஆண்டு, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 53 பேரின் வங்கி கணக்குகளில், 65 லட்சத்து 81,199 ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 11,74,762 ரூபாய் மற்றும் உரியவர்களுக்கு மீட்டு கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை குறியீடு இல்லாத வேகத்தடைகளால் ஆபத்து.
கரூர் அருகே கோயம்பள்ளி கிராமத்துக்கு செல்லும் சாலையில், அதிக அளவில் வளைவுகள் உள்ளன. இதனால், பல இடங்களில் வாகனத்தின் வேகத்தை குறைக்கும் வகையில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடை உள்ள இடங்களில் இருளில் ஒளிரும் வகையில் வெள்ளை நிற எச்சரிக்கை குறியீடு வரையவில்லை. மேலும் ,அப்பகுதியில் தெருவிளக்குகள் பெரும்பாலும் இல்லாததால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செய்பவர்கள் வேகத்தடையில் சிக்கி, படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே, கோயம்பள்ளி சாலையில் வெள்ளை நிற கோடு வரைய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.