மேலும் அறிய

Yercaud Bus Accident: ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தொடரும் சோகம்

விபத்தில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் தனியார் பேருந்து எழுவது பயணிகளுடன் சேலம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை சேலத்தைச் சேர்ந்த மணி என்பவர் இயக்கி வந்தார்.

விபத்து:

ஏற்காட்டில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து மாலை 5:40 மணிக்கு மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 13 வது கொண்டை ஊசி வளைவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பனிரெண்டாவது கொண்டை ஊசி வளைவு தாண்டி, பதினோராவது கொண்டை ஊசி வளைவின் அருகில் விபத்துக்குள்ளானது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

6 பேர் பலி:

இந்த விபத்தில் முனீஸ்வரன் என்ற 11 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிக காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சந்தோஷ் பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணித்து விபத்துக்குள்ளான 65 பேர் உடனடியாக மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் கார், வேன்கள் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் குணமடைந்து தற்போது வீடு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் ஏற்காடு தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

Yercaud Bus Accident: ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தொடரும் சோகம்

விபத்திற்கான காரணம்:

அதிக அளவிலான பயணிகளை ஏற்றியதாலும், அதிவேகத்தில் இயக்கப்பட்டதாலும் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக கூறப்பட்டது. குறிப்பாக மலைப்பாதைகளில் செல்லும் பேருந்துகளில் பாதுகாப்பிற்காக ஒரு கதவுகள் மட்டுமே இருக்கும். மேலும், சாதாரண பேருந்தை விட மலைகளில் செல்லும் பேருந்துகளில் சீட் குறைவாகவே இருப்பது வழக்கம்.

இதேபோன்று மலைப்பாதையில் இயக்கப்படும் பேருந்துகளில் நின்று கொண்டு பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்க கூடாது என பல்வேறு விதிமுறைகள் இருந்தும், அதிக அளவிலான பயணிகளை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக வளைவில் வந்ததால் ஸ்டேரிங் ராடு உடைந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் ஓட்டுனரின் கவன குறைவால் மட்டுமே பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.

கூடுதல் பேருந்து தேவை:

சேலத்தில் இருந்து பல்வேறு தொழிலாளிகள் தினம் தோறும் காலையில் ஏற்காடு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பேருந்து பயணம் செய்கின்றனர். வேறு வழியின்றி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட அளவைவிட பயணிகளை அதிகமாக ஏற்றி செல்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சான்றுகின்றனர். 

விபத்துக்கு பின்னர் ஏற்காடு செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக ஓட்டுநருக்கு மலையில் வாகனத்தை இயக்கிய அனுபவம் உள்ளதா? வாகனம் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்பது குறித்து தீவிர கண்காணிப்பிற்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றது.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! நெரிசல் நேரங்களில் லாரிகளுக்குத் தடை! - எப்போது தெரியுமா?
புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! நெரிசல் நேரங்களில் லாரிகளுக்குத் தடை! - எப்போது தெரியுமா?
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget