மேலும் அறிய
Advertisement
துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் அனைத்து துறைமுகங்களிலும் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அந்தமான் போர்ட் பிளேரில் இருந்து கிழக்கு வட கிழக்காக 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு திசையில் மியான்மர் கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் முன்னெச்சரிக்கை கூண்டுகள் ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பாம்பன் மற்றும் கடலூரில் அறிவிப்பாக 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion