மேலும் அறிய

Cyclone Michuang: மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணியை தொடங்கி வைத்த சேலம் கலெக்டர்!

புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில் சேலத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வந்தது. புயல் கரையைக் கடந்து மழை நின்று இருந்தாலும் சென்னை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதேபோல் சாலைகளில் இருந்த மரங்கள், மின்சார கம்பங்கள் மிக்ஜாம் புயலினால் சாலைகளில் சாய்ந்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து அதீத கனமழை பெய்ததால் சென்னை மாநகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதையடுத்து வெள்ள தடுப்பு பணி மற்றும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

Cyclone Michuang: மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணியை தொடங்கி வைத்த சேலம் கலெக்டர்!

இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக 5,000 குடும்பங்களுக்கு தேவையான பிரட், பால் பவுடர், வாட்டர் பாட்டில், பாய், போர்வை, நைட்டி, நாப்கின்கள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஒரு லாரி மூலமாக நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். நிவாரண பொருட்கள் அனுப்ப விரும்புவோர் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு பொருட்களை வழங்கலாம் என்றும் அங்குள்ள அரசு அலுவலர்கள் வாயிலாக நிவாரண பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார். முதல் கட்டமாக ஒரு லாரி அனுப்பப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளன. மேலும் நிவாரணப் பொருட்களை வழங்க விருப்பமுள்ளவர்கள் சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் இதற்குரிய பொறுப்பு அலுவலரிடம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Cyclone Michuang: மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணியை தொடங்கி வைத்த சேலம் கலெக்டர்!

முன்னதாக கடந்த திங்கட்கிழமை சென்னையில் வெள்ள தடுப்பு பணி மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக சேலம் மாநகராட்சியில் இருந்து 225 தூய்மை பணியாளர்கள் சுகாதார மேற்பார்வையாளர்களுடன் சென்னைக்கு விரைந்தனர். குடிநீர், பாய், பெட்ஷீட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பணி உபகரங்களுடன் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து 4 பேருந்துகளில் புறப்பட்ட தூய்மை பணியாளர்களை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். குறிப்பாக சேலம் மாநகராட்சியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள 225 தூய்மை பணியாளர்களுக்கு சென்னையில் உள்ள மக்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும், அவர்களது அடிப்படை தேவைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா என்று கவனித்துக் கொள்ள வேண்டும், அதேபோல் சென்னை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து சாலைகளில் உள்ள மரங்கள், மின்சார கம்பங்களை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget