மேலும் அறிய

CUET: க்யூட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம்!!

சியுஎட் (CUET) எனப்படும் கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முடிவடைவதாக இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சியுஎட் (CUET) எனப்படும் கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முடிவடைவதாக இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் விண்ணப்பிக்க மே 22-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அண்மையில் யுஜிசி சார்பில் வெளியானது.  ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும். 

இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. 

3 பிரிவுகளாகக் கேள்விகள்

பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும். 

இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம். 

2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.


CUET: க்யூட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம்!!

3ஆவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகள் இந்தப் பிரிவில் கேட்கப்படும். 

இந்த நிலையில், பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கு மே 6ஆம் தேதி கடைசியாக இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், கால அவகாசம் மே 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேர்வர்கள் https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

கூடுதல் விவரங்களுக்கு:  https://nta.ac.in/Download/Notice/Notice_20220327205829.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து படிக்கவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி": காஞ்சிபுரத்தில் கடுமையாக விமர்சித்த துணை முதல்வர் உதயநிதி!
VS Babu TVK: மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டி! திமுக டூ தவெக.. யார் இந்த விஎஸ் பாபு?
VS Babu TVK: மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டி! திமுக டூ தவெக.. யார் இந்த விஎஸ் பாபு?
ஒரு கையில் குழந்தை... மறு கையில் வேட்புமனு! அதிரவைத்த மருத்துவர் அபிநயா...
ஒரு கையில் குழந்தை... மறு கையில் வேட்புமனு! அதிரவைத்த மருத்துவர் அபிநயா...
நாதக வேட்பாளர்: ஏர் கலப்பை, ஆட்டுக்குட்டியுடன் மனு! விவசாயிகளின் கவனத்தை ஈர்த்த நூதன முயற்சி!
நாதக வேட்பாளர்: ஏர் கலப்பை, ஆட்டுக்குட்டியுடன் மனு! விவசாயிகளின் கவனத்தை ஈர்த்த நூதன முயற்சி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
GOLD SILVER RATE: அதிர்ச்சி கொடுத்த தங்கம்; காலையில் குறைந்து மாலையில் இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
அதிர்ச்சி கொடுத்த தங்கம்; காலையில் குறைந்து மாலையில் இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
“செந்தில் பாலாஜிக்கு சவால்
“செந்தில் பாலாஜிக்கு சவால்" - நாணயங்களுடன் வந்த நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்...
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
தோளில் ஏர்க்கலப்பை.. மாட்டு வண்டியில் பேரணி - மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அதிரடி மனுத்தாக்கல்...!
தோளில் ஏர்க்கலப்பை.. மாட்டு வண்டியில் பேரணி - மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அதிரடி மனுத்தாக்கல்...!
iPhone 18 Leaks: இறுதியாக, சிறிய டைனமிக் ஐலேண்ட்டுடன் வரும் ஐபோன் 18; இணையத்தில் கசிந்த புகைப்படம், தகவல்கள்
இறுதியாக, சிறிய டைனமிக் ஐலேண்ட்டுடன் வரும் ஐபோன் 18; இணையத்தில் கசிந்த புகைப்படம், தகவல்கள்
Vinfast Electric Scooter: வரப்போது வின்ஃபாஸ்ட் இ ஸ்கூட்டர்! ஒன்னு இல்ல மூணு..! என்னென்ன தெரியுமா?
Vinfast Electric Scooter: வரப்போது வின்ஃபாஸ்ட் இ ஸ்கூட்டர்! ஒன்னு இல்ல மூணு..! என்னென்ன தெரியுமா?
Embed widget