School, College Leave: வெளுத்து வாங்கிய கனமழை.. கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு.
கனமழை காரணமாக பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து 3 வது நாளாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்நிலையில், இன்று எந்த பகுதிகளில் கனமழை இருக்காது என தெரிந்து கொள்வோம்.
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை,கோவை, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி,மயிலாடுதுறை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், நெல்லை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 24 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, மழை பெய்யாது என தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி,மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (நவம்பர்- 3) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தொடங்கிய பருவமழையால் கடலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் இரவு மழை தீவிரம் அடைந்தது.தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருதாச்சலம், பண்ருட்டி கடலூர் ஆகிய பகுதிகளில் இரவு வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதிகளுக்குள் மழை நீர் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிக்கு இன்று 03.11.2022 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னைக்கு அடுத்து மழையால் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று என்பதால் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.