மேலும் அறிய

கடலூர் எம்.பி டிஆர்வி ரமேஷ் மீதான கொலை வழக்கு - ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

விருத்தாசலம் கிளைசிறையில் உள்ள நடராஜன், அல்லா பிச்சை, கந்தவேல், வினோத், சுந்தராஜன் ஆகிய சிறையில் உள்ள 5 ஊழியர்களை விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு

*கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு -ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு நாளை ஒத்திவைப்பு -கொலை வழக்கில் சிறையில் உள்ள 5 ஊழியர்களை 2 நாள் விசாரிக்க கோரி சிபிசிஐடி மனு*
 
கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த கோவிந்தராஜ் என்பவர் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். முதலில் இந்த வழக்கானது காடம்புளியூர் காவல்துறை சார்பில் விசாரித்து வந்த நிலையில், அதற்குப்பின் கடந்த மாத இறுதியில் இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதன்படி வழக்கானது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டு ADSP கோமதி தலைமையில் 5 ஆய்வாளர்கள் கொண்ட குழு பண்ருட்டியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரணையை தொடங்கினர், 

கடலூர் எம்.பி டிஆர்வி ரமேஷ் மீதான கொலை வழக்கு - ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு
 
விசாரணையில் கோவிந்தராஜ் எம்பி ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலை ஊழியர்களால் கொலை செய்யப்பட்டார் என உறுதி செய்து, கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ், மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் எம்பி ரமேஷை தவிர மற்ற 5 பேர் கைது செய்யபட்டு கடந்த 5 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். பின் கடந்த 11 ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின் நீதிபதியின் உத்தரவின்பேரில் எம்பி ரமேஷ் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கடலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
 
பின் சிறைச்சாலையில் இருந்து கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் எம்பி ரமேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை அனுமதி கோரியிரந்த நிலையில் நீதிபதி பிரபாகரன் அவர்கள் சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க ஒருநாள் அனுமதி வழங்கி உத்தரவிட்ட நிலையில், கடலூர் சிபிசிஐடி காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ADSP கோமதி மற்றும் 3 ஆய்வாளர்கள் தலையில் விசாரணை செய்யப்பட்டது 3 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், 
 
பின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் அவர்கள் எம்பி ரமேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த நிலையில் ஜாமீன் கோரி திமுக எம்பி ரமேஷின் வழக்கறிஞரான சிவராஜ் என்பவர் கடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடத்தப்படும் என உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று காலை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது, அதில் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் கொலை வழக்கில் கைது விருத்தாசலம் கிளைசிறையில் உள்ள நடராஜன், அல்லா பிச்சை, கந்தவேல், வினோத், சுந்தராஜன் ஆகிய சிறையில் உள்ள 5 ஊழியர்களை சிபிசிஐடி காவல்துறையினர் இரண்டு நாள் விசாரிக்க கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" அரசு மருத்துவமனையில் பணம் கேட்டால் உடனே வேலை காலி " - பணம் கேட்டால் 104-ல் புகார் அளிக்கலாம்
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
மதுரை: தடை செய்யப்பட்ட குட்கா மீது அதிரடி வேட்டை... 39 கடைகள் சீல் !
மதுரை: தடை செய்யப்பட்ட குட்கா மீது அதிரடி வேட்டை... 39 கடைகள் சீல் !
ஒரே நாளில் ரேஷன் கார்டு பிரச்சினைக்கு தீர்வு! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
ஒரே நாளில் ரேஷன் கார்டு பிரச்சினைக்கு தீர்வு! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget