மேலும் அறிய

Covid Booster Dose: யாரெல்லாம் பூஸ்டர் தடுப்பூசி போடலாம்? தகுதிவாய்ந்தோர் யார்? முழு விபரம் உள்ளே..!

முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசியோ, கோவாக்சின் தடுப்பூசியோ செலுத்தப்பட்டிருந்தால் அதே வகை தடுப்பூசி தான் தற்போது செலுத்தப்படுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.   

இதன்மூலம், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுனர்கள், ஆஷா பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், காவலர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட  முன்களப் பணியாளர்கள் மூன்றாம் கட்ட முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.    

இணை நோய்த்தன்மை: இதய அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள், சி.டி / எம்.ஆர்.ஐ ஆவணப்படுத்தப்பட்ட பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு சிகிச்சையில் உள்ளவர்கள், நீரிழிவு நோய் (> 10 ஆண்டுகள் அல்லது சிக்கல்களுடன்) மற்றும்  உயர் இரத்த அழுத்தம் சிகிச்சையில் உள்ளவர்கள், முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு நோய்கள் / எச்.ஐ.வி தொற்று பாதிப்புகள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம். 

தற்போது, செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்களில் இந்த முன்னெச்சரிகை தடுப்பூசிகள் போடப்படும். 

இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த இருக்கிறது. 

அதேபோன்று, முதல் தவணை மற்றும் இரட்னாவது தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசியோ, கோவாக்சின் தடுப்பூசியோ செலுத்தப்பட்டிருந்தால் அதே வகை தடுப்பூசி தான் தற்போது செலுத்தப்படுகிறது. தடுப்பூசியை மாற்றி போடும் (Mix and Match) கொள்கை இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கோ-வின் (C0-win) தளத்தில் பயனாளிகள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தடுப்பூசி மையங்களில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Covid Booster Dose: யாரெல்லாம் பூஸ்டர் தடுப்பூசி போடலாம்? தகுதிவாய்ந்தோர் யார்? முழு விபரம் உள்ளே..!

கொரோனா  தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய செல்பேசி வைத்திருப்பது கட்டாயமல்ல என்றும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு இருப்பிடச்  சான்றை அளிப்பதும் கட்டாயமல்ல என்றும்  கோவின் தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்றும்  மத்திய அரசு தெளிவுபடுத்தியது.  இணையதள வசதி அல்லது ஸ்மார்ட் செல்பேசி அல்லது செல்பேசியே இல்லாதவர்கள்கூட அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். 

தமிழகத்தில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் வெறும் 40 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பூசிகள் தடுத்து விடும் என்பது தவறான தகவல்.தடுப்பூசிகள் கொரோனா தொற்று பாதிப்பை அதிகரிக்காமல் தடுக்கக்கூடிய வல்லமையைப் பெற்றிருக்கிற்றது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையை தடுப்பூசிகள் தவிர்க்கும் என்றும் கூறப்படுகிறது. 

எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொது மக்களும் அந்தந்த தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.                  

மேலும், வாசிக்க:  

Covid Booster dose | பூஸ்டர் 3-வது தடுப்பூசியா? ஏன் போடவேண்டும்? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget