மேலும் அறிய

CM Vijay: வித்யா இருந்திருக்கலாம்.. முதல்வர் விஜய் வாழ்க்கையில் சொல்ல முடியாத வலி!

எங்கு பார்த்தாலும் முதலமைச்சர் விஜய் என சொல்லும்போது ஒரு குடும்ப உறுப்பினராக மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடவுளின் ஆசீர்வாதம் தான் என விமலா ராணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதனைக் காண தங்கை வித்யா இருந்திருக்கலாம் என அவரது முறைப்பெண் விமலா ராணி தெரிவித்துள்ளார். 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இது ஒட்டுமொத்தமாக தமிழக மக்களிடையே ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம். அந்த வகையில் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தபோதே தங்கள் வீட்டில் ஒருவராக விஜயை மக்கள் பாவித்தனர். அப்படியிருக்கும்போது தற்போது முதலமைச்சராகவும் மாறியுள்ளார். இந்த நிலையில் விஜயின் முறைப்பெண் விமலா ராணி ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளார். 

அதில், “எங்கு பார்த்தாலும் முதலமைச்சர் விஜய் என சொல்லும்போது ஒரு குடும்ப உறுப்பினராக மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடவுளின் ஆசீர்வாதம் தான். விஜய் கடவுளுக்கும், மக்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறார். வீட்டில் விஜய் மிகவும் அமைதியாக தான் இருப்பார். ஒவ்வொரு படத்துலேயும் அவர் கேரக்டராக வரும்போது அதனுடைய அர்ப்பணிப்பை முழுமையாக  கொடுப்பார்” என தெரிவித்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dr. Vimala Rani Britto (@vimala_rani_britto)

தொடர்ந்து அவரிடம் விஜய் தங்கை புகைப்படம் காட்டப்பட்டது. அதுதொடர்பாக பேசிய விமலா ராணி, “நான் அப்போது சின்ன பொண்ணு தான். எங்க அண்ணன் பிறந்தநாள் அன்று தான் வித்யா இறந்தாள். அவள் ரொம்ப கஷ்டப்பட்டாள். உடல்நலப் பிரச்னைக்கு நிறைய சிகிச்சை கொடுக்கப்பட்டது. எங்களுக்கு இன்றைக்கு வரை அந்த பாப்பா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தோன்றுகிறது. அப்படியென்றால் விஜயைப் பற்றி யோசித்து பாருங்கள். உடன்பிறந்தவர்கள் என்பது மிகப்பெரிய பலம். ஆனால் அந்த பலம் அவருக்கு இல்லை என்பது சொல்லமுடியாத கஷ்டம் தான். ஒரு தங்கையை இழந்த விஜய்க்கு இன்றைக்கு உலகமெங்கும் அவருக்கு பல தங்கைகளை கொடுத்துள்ளது. 

அதேசமயம் அத்தை ஷோபா, வித்யா இறப்புக்குப் பின் விஜயுடன் நெருக்கமாக இருந்தார். அவர் மீது மிகப்பெரிய அன்பு செலுத்தினார். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். ஒரு விஷயம் பிடித்துவிட்டாலோ, சரியான விஷயமாக தெரிந்தாலோ அதை தட்டாமல் செய்து விடுவார். 

விஜய் மீது நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. அவரின் அமைதி ஏதோ ஒன்றை ஆழமாக சிந்திக்க உதவுகிறது. ஹீரோவாக நிலைத்து நிற்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை செய்துவிட்டு இப்போது முதலமைச்சராகவும் மாறியுள்ளார். முதலமைச்சரான பிறகு தலைவர்களை சந்தித்ததும் விஜயின் பணிவு என சொல்லலாம். நம் வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்பதை விட மற்றவர்களுக்கு என்ன நல்லதை விட்டுட்டு செல்கிறோம் என்பது முக்கியம். அந்த வகையில் விஜய் தலைவர்களை சந்தித்த விஷயத்தில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என விமலா ராணி கூறியுள்ளார்.

விஜய் தன் தங்கை வித்யாவைப் பற்றி பல நேர்காணலில் தெரிவித்துள்ளார். 1984ம் ஆண்டு வித்யா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அந்த நிகழ்வு தன்னை மிகப்பெரிய அளவில் மாற்றியதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Kanchipuram New Bus Stand: காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம்: விலகியது தடை! விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
Chennai Water Metro: இனி டிராஃபிக் கவலையில்லை.. சென்னை கடலில் மெட்ரோ சேவை.. வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Water Metro: இனி டிராஃபிக் கவலையில்லை.. சென்னை கடலில் மெட்ரோ சேவை.. வேகமெடுக்கும் பணிகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget