ஆரணி: அரசுப்பள்ளியில் பரிசோதனை: 2 ஆசிரியைகள்; 18 மாணவிகளுக்கு கொரோனா...
ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியை உட்பட 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கோட்டை வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றன. இந்த பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தமிழ் நாட்டில் தற்போது கொரோனா மற்றும் ஓமிக்கிரான் அச்சுறுத்தல் காரணமாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகள் வரையிலான பள்ளி மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டு உள்ளது. இந்தநிலையில் தமிழ் நாடு முழுவதும் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் நேற்று ஆரணி அரசு பெண்கள் மேல்நிலையப்பள்ளியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கும், மற்றும் பள்ளியில் பணியாற்றும் அரசு ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோனை செய்தனர்.
மருத்துவர்கள். பரிசோதனை செய்த சளி மாதிரிகளை சேகரித்து சென்னையில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பள்ளி மாணவிகன் சளி மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டத்தில் 2 ஆசிரியர்களுக்கும் மற்றும் 18 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. மேலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை உடனடியாக சுகாதார துறையினர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனாவிற்கு என ஒதுக்கப்பட்ட அறையில் சேர்க்கப்பட்டு அவன்களுக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்படு வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து உடனடியாக ஆரணி நகராட்சியின் சார்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கபட்டும் அதேபோன்று பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வீடுகளிலும் கிரிமி நாசினி தெளித்து இவர்களுடன் நெருக்கத்தில் இருந்தவர்களை கண்டறிந்தும் அவர்களிடம் இருந்தும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் இவர்களின் வீடுகள் மற்றும் தெருக்கள் சுற்றிலும் பிளிச்சிங்க் பவுடர் போடப்பட்டுள்ளது. நாளை முதல் பொங்கல் பண்டிகை விடுமுறையால் பள்ளி இழுத்து மூடப்பட்டன. ஆரணி அரசு பள்ளியில் ஆசிரியை உட்பட 20 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சதை ஏற்படுத்தியுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )