மேலும் அறிய

Mettur Dam: தொடர்ந்து சரிவு.. மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,384 கன அடியில் இருந்து 15,929 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 3,600 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 19,090 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 18,384 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 15,929 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: தொடர்ந்து சரிவு.. மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,384 கன அடியில் இருந்து 15,929 கன அடியாக குறைந்தது.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 96.90 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 60.89 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 3,600 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: தொடர்ந்து சரிவு.. மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,384 கன அடியில் இருந்து 15,929 கன அடியாக குறைந்தது.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Exemption: ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவுக்கு வந்த மத்திய அரசு - இன்சூரன்ஸ், வாட்ச் தொடங்கி குடிதண்ணீர் வரை..!
GST Exemption: ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவுக்கு வந்த மத்திய அரசு - இன்சூரன்ஸ், வாட்ச் தொடங்கி குடிதண்ணீர் வரை..!
Womens T20 Worldcup Final: மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனல் - தென்னாபிரிக்க Vs நியூசிலாந்து பலப்பரீட்சை, முதல் வாய்ப்பு யாருக்கு?
Womens T20 Worldcup Final: மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனல் - தென்னாபிரிக்க Vs நியூசிலாந்து பலப்பரீட்சை, முதல் வாய்ப்பு யாருக்கு?
Breaking News LIVE 20th OCT 2024: இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 20th OCT 2024: இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம் தெரியுமா?
Bangalore Weather Report: நியூசிலாந்து Vs இந்தியா, பெங்களூரு டெஸ்ட் தோல்வியை தடுக்குமா மழை? இன்றைய வானிலை நிலவரம்
Bangalore Weather Report: நியூசிலாந்து Vs இந்தியா, பெங்களூரு டெஸ்ட் தோல்வியை தடுக்குமா மழை? இன்றைய வானிலை நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Madurai | Su Venkatesan vs Minister | MP சு.வெ vs அமைச்சர் மூர்த்திமுற்றும் வார்த்தைப்போர்!பற்றி எரியும் மதுரைUdhayanidhi on Tamilisai | ”அக்கா..கிரிவலம் நான் போனேனா?”தமிழிசைக்கு உதயநிதி பதிலடிRN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Exemption: ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவுக்கு வந்த மத்திய அரசு - இன்சூரன்ஸ், வாட்ச் தொடங்கி குடிதண்ணீர் வரை..!
GST Exemption: ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவுக்கு வந்த மத்திய அரசு - இன்சூரன்ஸ், வாட்ச் தொடங்கி குடிதண்ணீர் வரை..!
Womens T20 Worldcup Final: மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனல் - தென்னாபிரிக்க Vs நியூசிலாந்து பலப்பரீட்சை, முதல் வாய்ப்பு யாருக்கு?
Womens T20 Worldcup Final: மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனல் - தென்னாபிரிக்க Vs நியூசிலாந்து பலப்பரீட்சை, முதல் வாய்ப்பு யாருக்கு?
Breaking News LIVE 20th OCT 2024: இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 20th OCT 2024: இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம் தெரியுமா?
Bangalore Weather Report: நியூசிலாந்து Vs இந்தியா, பெங்களூரு டெஸ்ட் தோல்வியை தடுக்குமா மழை? இன்றைய வானிலை நிலவரம்
Bangalore Weather Report: நியூசிலாந்து Vs இந்தியா, பெங்களூரு டெஸ்ட் தோல்வியை தடுக்குமா மழை? இன்றைய வானிலை நிலவரம்
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
Nalla Neram Today OCT 20: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today:நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Embed widget