கனமழை எச்சரிக்கை! 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை: வானிலை மையம் அலர்ட்!
"கோயம்புத்தூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

TN Weather Forecast Today: "கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இன்று (06-12-2025) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது"
வடகிழக்கு பருவமழை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், கோயம்புத்தூர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரையிலான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி வரை கனமழை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று காலை 10:00 மணி வரை 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, நீலகிரி ,திருவள்ளூர் , விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 10 மணி வரை கணமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பிருப்பதாகவும், சாலைகளில் தண்ணீர் பிறருக்கு எடுத்து ஓடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





















