CM Stalin: “தாங்க முடியாத துயரம்; உதவிகளை செய்வோம்; ஆனால் ப்ரியாவின் உயிருக்கு ஈடாகாது” : முதல்வர் இரங்கல்
CM Stalin: கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என ப்ரியாவின் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவித்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
CM Stalin: கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என ப்ரியாவின் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவித்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவிற்கு சிகிச்சையின் போது மருத்துவர்கள் கவனக் குறைவாக இருந்ததால், ப்ரியா உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது. (2/2) pic.twitter.com/kfNzP0LRqn
— M.K.Stalin (@mkstalin) November 17, 2022
ஏற்கனவே தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனைக்குச் சென்று முழு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடை நீக்கம் செய்தார். இந்நிலையில், இன்று மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாகச் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும், அவரது குடும்பத்திற்கு வீடு வழங்கும் ஆணையை வழங்கினார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கதில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர்,
கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்!
— M.K.Stalin (@mkstalin) November 17, 2022
ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் - நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு! (1/2) pic.twitter.com/w6bMajfsSS
கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் - நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு! அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்ததும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டணங்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக, கால்பந்ந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து வந்தனர். மேலும், இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மிகவும் கவனத்துடன் அரசு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இரண்டு மருத்துவர்கள் தலைமறைவு
கால்பந்து வீராங்கனை ப்ரியாவுக்கு சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் தான் உயிர் இழந்தார் என்பதை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்கனவே உறுதி செய்திருந்தார். இதனால் துறை சார்ந்த நடவடிக்கையாக மருத்துவர்கள் கே. சோமசுந்தர் மற்றும் ஏ. பால் ராம் சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தார். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது மருத்துவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.