வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின்
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 116 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

திண்ணையில் அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வெட்டி பேச்சு பேசி வருகிறார் என இபிஎஸ்சை முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரியாக சாடியுள்ளார்.
சிவகங்கையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் “சிவகங்கை, திருப்பத்தூர், காளையார்கோவில் உள்ளிட்ட பகுதி மக்களுக்காக ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திமுக ஆட்சியில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் புதிய நகராட்சி கட்டிடம், மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, நண்பனாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதரையும் நாடிச் சென்று உதவுவதுதான் திராவிட மாடல் அரசு.
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 116 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். திண்ணையில் உட்காந்து கொண்டு வாய்க்கு வந்த படி இபிஎஸ் பேசி வருகிறார். மற்றொரு கட்சியின் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுகிறார் இபிஎஸ்.
எல்லோருக்கு செல்போன் தருவோம் என்றாரே? செய்தார்களா? நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால் இபிஎஸ்சால் தாங்கி கொள்ள முடியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புலம்பி கொண்டிருக்கிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை இபிஎஸ்சால் நிரூபிக்க முடியுமா? அதிமுக ஆட்சியில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளால் பயனடைந்தவர்களின் விவரங்களுடன் வெளியிடத் தயாரா?
தமிழ்நாடு திவாலாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இபிஎஸ் பேசி வருகிறார். இணக்கமான ஒன்றிய அரசிடம் இருந்து அதிமுக ஒன்றையும் கேட்டு பெற முடியவில்லை. வெற்று வாக்குறுதிகளை வழங்கிவிட்டு தமிழ்நாட்டை அதிமுக பாழாக்கியது. தமிழ்நாட்டை அதல பாதாளத்துக்கு தள்ளியதை மக்கள் மறந்து விடுவார்கள் என இபிஎஸ் நினைக்கிறார்.
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை மீறியே தமிழகத்தில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். திமுக ஆட்சிக்கு எத்தனை அமாவசை என்று எடப்பாடி பழனிசாமி எண்ணிக்கொண்டிருக்கிறார். இருட்டில் உட்காந்துகொண்டு அமாவாசையை எண்ணிக்கொண்டிருக்கிறார். தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரைமட்டத்திற்கு அனுப்பியவர்கள் இன்று தமிழக அரசு திவால் என சொல்கின்றனர். இபிஎஸ் போடும் அனைத்துமே தப்புக் கணக்காகத்தான் முடியும்.
தமிழ்நாடு திவாலாக போவதாக எடப்பாடி பேசுகிறார். அப்பாடியானால் தமிழ்நாடு திவாலாக எடப்பாடி ப்விரும்புகிறாரா? தமிழ்நாட்டை திமுகதான் என்றும் ஆளும்.” என சாடினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

