Watch Video : அண்ணா சாலையில் விபத்து.. ஓடிச்சென்று உதவிய முதலமைச்சர் ஸ்டாலின்.. பரபரப்பு வீடியோ..
விபத்தை கண்ட முதலமைச்சர், கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில் ஏற்றிவிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த திரு.அருள்ராஜ் என்பவர்
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 21, 2022
1/2 pic.twitter.com/MtoIwIyJvh
அதை கண்ட ஸ்டாலின், தனது கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில் ஏற்றிவிட்டார். சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதை கண்டு கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 21, 2022
2/2
மாநிலத்தின் முதலமைச்சரே வாகனத்தை நிறுத்தி விபத்தில் காயமடைந்தவரை ஆட்டோவில் ஏற்றிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, பஞ்சாப் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் சன்னி பொறுப்பு வகித்தபோது, விபத்தில் சிக்கியவருக்கு அவர் உதவி செய்திருந்தார். கான்வாயில் அவர் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு விபத்து நிகழ்ந்தது. அப்போது, பாதுகாப்பு வாகனத்தை விட்டு கீழே இறங்கி, விபத்தில் சிக்கியவருக்கு சன்னி உதவி புரிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது போன்று பல நிகழ்வுகளில் அரசின் தலைமை பதவியில் வகித்தவர்கள் உதவி செய்திருக்கின்றனர்.
கடந்தாண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அவரின் செயல்களால் வெகுவான பாராட்டுகளை பெற்று வருகிறார். குறிப்பாக, திமுக செயல்படுத்தி வரும் சமூக நல திட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன.
ஆனால், மற்றொரு புறம், எதிர்கட்சியினர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், விபத்தில் சிக்கியிவருக்கு ஸ்டாலின் உதவி புரிந்திருக்கிறார்.