மேலும் அறிய

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு. .சாட்டையை சுழற்றும் முதலமைச்சர்...!

கூட்டுறவு சங்கத்தேர்தலில் முறைகேடாக வெற்றிபெற்று உறுப்பினர்களாக இருப்பது பெரும்பாலும் அதிமுகவினர் தான். இந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது அதிமுகவினர் தான்.

பொதுவாக தனியார் நிறுவனங்கள் எல்லாம் லாபநோக்கத்தில் இயங்குபவை தான். ஆனால், லாபநோக்கம் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு செயல்படவேண்டும் என்றால் அது போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை போன்று அரசுத்துறையாக இருக்கும். இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்று இருக்கிறதென்றால் அது தான் கூட்டுறவுத்துறை. இடைத்தரகர்கள், கந்துவட்டிக்காரர்களிடமிருந்து சாமானியர்கள் தப்பிக்க உருவாக்கப்பட்ட ஒரு துறை. இந்த துறையால் பயனடைந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள், சிறு குறு வணிகர்கள், கைத்தொழில் செய்பவர்கள் தான். பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களை கைதூக்கிவிட உருவாக்கப்பட்ட ஒரு உன்னதமான துறை தான் தமிழ்நாட்டில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறது.

5 சவரன் அளவிற்கு அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதியாகவே அளித்திருந்தது திமுக. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததும், நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு மிகாமல் அடகுவைத்துள்ள தகுதியான நபர்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றதோடு அதற்காக ரூபாய் 6000 கோடியையும் ஒதுக்குவதாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

எல்லோருக்கும் இந்த அறிவிப்பில் உள்ள “தகுதியான நபர்களுக்கு” என்பதற்கு என்ன அர்த்தம் என்ற குழப்பம் ஏற்பட்டது. முதலமைச்சரின் இந்த தகுதியான நபர்களுக்கு என்பதன் பின்னால் இருந்தது கூட்டுறவு சங்கங்களில் செய்யப்பட்டிருந்த முறைகேடுகள் தான். “இப்படியெல்லாம் கூட முறைகேடு நடக்குமா என்று அதிர்ச்சியாகும் வகையில் பல கோடி ரூபாய் அளவிற்கு தங்க நகைக்கடன்கள் வழங்கியதில் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்த்திருக்கிறது. எப்படியெல்லாம் முறைகேடு நடந்திருக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதில் சிலவற்றை பாருங்கள்.

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு. .சாட்டையை சுழற்றும் முதலமைச்சர்...!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கடன் சங்கத்தில் தங்க நகைகள் அடமானம் வைக்கப்பட்டு நகைக்கடன் பெறப்பட்டுள்ளது. அடமானமாகப் பெற்ற 500 நகை பொட்டலங்களில் 261ல் நகைகளே இல்லை. அதாவது நகைகளே வாங்காமல் கடன் கொடுத்திருக்கிறார்கள். இருப்பு இல்லாத நகைக்கடன் பதிப்பு 1 கோடியே 98 லட்சம். நாமக்கல் மாவட்டம் மண்ணசமுத்திரம் கூட்டுறவு நிர்வாக இயக்குநர் கிருஷ்ணசாமி 10 நகை பொட்டலங்களை வைத்து 11 லட்சம் நகைக்கடன் பெற்றிருக்கிறார். அவர் கொடுத்திருந்தவற்றில் 10 நகைபொட்டலங்களில் இருந்தது கவரிங் நகைகள். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்தில்,  ரத்தன் லால் என்பவர், அவரது மனைவி சுந்தரி பாய், மகன்கள் ராஜ்குமார், தன்ராஜ் மற்றும் மருமகள்கள் கான்கி தேவி, மஞ்சு என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த‌ உறுப்பினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு மேல் நகை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்கள். 1,685 நகைக்கடன்கள் மூலம் முறைகேடாகப் பெற்ற கடன் தொகை ரூபாய் 4.72 கோடி. நகை அடகுக்கடை நடத்துகிறவர்கள், தங்களிடம் அடமானத்துக்காக வந்த நகைகளை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடுத்து பணம் பெற்றுள்ளனர். மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களின் பெயர்களில் பல கோடி ரூபாய்கள் மோசடி நடைபெற்றுள்ளது. கூட்டுறவு தீர்மானங்களை திருத்தி சில உறுப்பினர்களை சேர்த்து நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு மேல் எல்லாம் நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடன் பெறத் தகுதியுள்ள நபரா என்ற சான்றை  ஆராயாமலேயே கடன் கொடுத்துள்ளனர். தனி நபருக்கு 20 லட்சம் கொடுப்பதற்குத்தான் வரம்பு உள்ளது என்று கூறப்படும் நிலையில், ஒரு கோடி ரூபாய் வரையில் கொடுத்துள்ளனர். இதுபோன்ற மோசடிகள் குறிப்பாக கோவை, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, தூத்துக்குடி உள்பட  பல்வேறு மாவட்டங்களில் பெரும் மோசடிகள் நடந்துள்ளன.

இதெல்லாம் முறைகேடுகளில் ஒரு பகுதி தான். இதே போன்று பல்வேறு வகைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த முறைகேடு குறித்து கேட்டபோது, கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்தபோது எங்கள் ஆட்சியிலும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் முறைகேடுகள் நடந்ததாக தகவல் இல்லை. முறைகேடு நடைபெற்றுள்ளவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கட்டும் என்றார்.

கூட்டுறவு சங்கத்தேர்தலில் முறைகேடாக வெற்றிபெற்று உறுப்பினர்களாக இருப்பது பெரும்பாலும் அதிமுகவினர் தான். இந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது அதிமுகவினர் தான். ஒரு மாவட்டத்தில் எத்தனை கோடி கடன் வழங்கப்படுகிறது என்பதை அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். முறைகேடுகளுக்கு அதிகாரிகளும் உடந்தை என்கின்றனர் திமுகவினர்.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த‌ உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் ‌பற்றிய விவரங்கள், கடன் பெற்ற நாள், தொகை, கடன் கணக்கு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பகுப்பாய்வு செய்ததில் நிறைய விதிமீறல்கள் நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதனால், 5 சவரன் வரையிலான நகைக்கடன் மட்டுமின்றி கூட்டுறவு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகைக் கடன்களையும் 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், கூட்டுறவு நிறுவனங்களில் 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த நகை கடன்களையும் 1.04.2021 முதல் ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள பொது நகைக் கடன்களையும் 100 சதவிகிதம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப் பணிகளுக்காக,  கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பெறப்பட்ட நகைகடன்களை 100 சதவிகிதம் ஆய்வு செய்யும். சென்னை மண்டலத்தில் துணைப்பதிவாளர்களை கொண்ட குழு அமைத்து நகைக்கடன்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 சவரனுக்கு அதிகமாக விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நகைக்கடனை வசூலிக்கவும், தவணைத் தொகையை கட்டத் தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் ஆய்வு பணியை நவம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்து சரக துணை பதிவாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்தடுத்த நிலைகளில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு, இறுதி அறிக்கையை நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் அனுப்ப  வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த ஆய்வுக்கு பின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு ஹெவியாக இருப்பதால் கலக்கத்தில் இருக்கின்றனர் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget