CM Stalin: சிரித்த முகத்துடன் கரூர் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்? நடந்தது என்ன?
கரூர் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சிரித்த முகத்துடன் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது.

முதல்வர் ஸ்டாலின் சிரித்த முகத்துடன் கரூர் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்ததாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நடந்தது என்ன என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் 41 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் மருத்துவமனைகளில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சிரித்த முகத்துடன் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின்?
அவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கரூர் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சிரித்த முகத்துடன் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளதாவது:
முதல்வர் சிரித்த முகத்துடன் கரூர் சென்றதாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் பழைய புகைப்படம்!
’’கடந்த 2024 செப்டம்பர் மாதம் சென்னையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் அவர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட படத்தை கரூரில் எடுத்ததாக வதந்தி பரப்பி வருகின்றனர்.
முதல்வர் சிரித்த முகத்துடன் கரூர் சென்றதாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !
— TN Fact Check (@tn_factcheck) September 29, 2025
கடந்த 2024 செப்டம்பர் மாதம் சென்னையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் அவர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட படத்தை கரூரில் எடுத்ததாக வதந்தி பரப்பி வருகின்றனர்.
ஆதாரம் :… https://t.co/kdCYquY9t6 pic.twitter.com/jrUo96T7Xv
ஆதாரம்:
https://www.socialnews.xyz/2024/09/27/chennai-v-senthil-balaji-meets-cm-m-k-stalin-gallery/
இவ்வாறு தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் யூனிட் தெரிவித்துள்ளது.






















