(Source: Poll of Polls)
விரைவில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம் : தூத்துக்குடியில் முதலமைச்சர் பேச்சு
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 1, 150 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 1, 150 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், "சர்வதேச அறைகலன் பூங்கா"வின் மூலம் 8 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் புதிய தொழில்கள் துவங்க ரூ.4,755 கோடி முதலீட்டில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது.
சர்வதேச ஃபர்னிச்சர் பூங்கா அமைகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்https://t.co/wupaoCQKa2 #CMMKStalinSpeech #Thoothukudi #InternationalFurniturePark pic.twitter.com/jIvpqYDzii
— ABP Nadu (@abpnadu) March 7, 2022
இதன் மூலம் நேரடியாக 17 ஆயிரத்து 476 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், நாள் தோறும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. மக்களிடம் செல், மக்களோடு வாழ் என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார்.
தூத்துக்குடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் அடிக்கல் நிகழ்ச்சியை நேரலையில் காண :
CM MK Stalin Live தூத்துக்குடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் அடிக்கல் நேரலை https://t.co/JzfRzI3tKf
— ABP Nadu (@abpnadu) March 7, 2022
நிதி நிலை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி தொழில்முனைவோர் உடன் கலந்து பேசி மக்கள் நலன் காக்கும் அரசாக நமது அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. விரைவில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். நீர்வளம் நிறைந்த வேளாண் நிலமாகவும், தமிழர்களின் பாரம்பரியம், பண்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக தூத்துக்குடி விளங்குகிறது என்றும், இந்தியாவில் முதல்முறையாக தூத்துக்குடியில் தான் அமையபோகிறது என்ற பெருமை தூத்துக்குடிக்கு கிடைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை தேர்ந்தெடுக்க காரணம் தென் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாகவும், பொருளாதாரத்தை உயர்த்தும் விதமாக தூத்துக்குடியில் இந்த சர்வதேச அறைகலன் பூங்கா தூத்துக்குடியில் துவங்கி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















